ஆப்நகரம்

புதியக் கல்விக் கொள்கை: மத்திய அரசு கூட்டத்தை புறக்கணித்த தமிழக அரசு!

புதிய கல்விக் கொள்கை தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தை தமிழக அரசு புறக்கணித்துள்ளது.

Samayam Tamil 17 May 2021, 12:11 pm
மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்கரியால் தலைமையில் புதிய கல்விக் கொள்கை தொடர்பான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது.
Samayam Tamil new education policy


இந்தக் கூட்டத்தில் பங்கேற்க அதிகாரிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இந்த கூட்டத்தில் பங்கேற்க ஆர்வமாக இருப்பதாக தெரிவித்திருந்தார்.

கொரோனாவில் மீண்டால் பார்வை இழப்பு: வெளியான அதிர்ச்சி தகவல்!

இந்நிலையில் தமிழகம் சார்பில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க அனுமதி வழங்கக் கோரி கடிதம் எழுதப்பட்டது. ஆனால் அதற்கு எந்த பதிலும் வராத நிலையில் தமிழகம் சார்பில் யாரும் கலந்துகொள்ளவில்லை.

மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்கரியால் தலைமையில் நடக்கும் ஆலோசனைக் கூட்டத்தை தமிழகம் புறக்கணித்துள்ளது.

சசிகலா வச்ச குறி இந்த தடவை தப்பாது: யாருக்காக ரீ என்ட்ரி கொடுக்கிறார் தெரியுமா?

திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்னரே புதிய கல்விக் கொள்கையை பலமாக எதிர்த்து வந்தது. இந்நிலையில் இந்த கூட்டம் புறக்கணிப்பின் மூலம் தமிழக அரசு புதிய கல்விக் கொள்கைக்கு எதிரான தனது எதிர்ப்பை பதிவு செய்யத் தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது.

அடுத்த செய்தி