ஆப்நகரம்

மருத்துவர்களுக்கு தமிழக அரசு அநீதி இழைத்து விட்டது: சென்னை உயர் நீதிமன்றம் சாடல்

அரசு பள்ளி ஆசிரியர்களை விட மிக குறைவான ஊதியமே 24 மணி நேரமும் பணியில் இருக்கும் மருத்துவர்களுக்கு வழங்கப்படுகிறது என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது

Samayam Tamil 4 Nov 2019, 4:24 pm
சென்னை: புனிதமான பணியை செய்து வரும் மருத்துவர்களுக்கு தமிழக அரசு அநீதி இழைத்து விட்டதாக சென்னை உயர் நீதிமன்றம் சாடியுள்ளது.
Samayam Tamil chennai high court


நோயாளிகளின் எண்ணிக்கைக்கேற்ப மருத்துவப்பணியிடங்களை அதிகரிக்க வேண்டும், தகுதிக்கேற்ற ஊதியம் வழங்க வேண்டும், மருத்துவ பட்ட மேற்படிப்பு மாணவர்களுக்கு இடஒதுக்கீடு, பணியிடக் கலந்தாய்வு, காலமுறை ஊதிய உயர்வு, பதவி உயர்வு என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மருத்துவர் சங்கங்களை உள்ளடக்கிய தமிழ்நாடு அரசு மருத்துவர்களுக்கான சம்மேளனம் கடந்த ஆக்ஸ்ட் மாதம் போராட்டத்தில் ஈடுபட்டது.

தற்காலிக டாக்டர்களை தொடர்ந்து அரசு நியமித்து வருகிறது..

அப்போது நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் 6 வார காலத்துக்குள் மருத்துவர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு நிறைவேற்றப்படும் என சுகாதாரத்துறை செயலாளர் உத்தரவாதம் அளித்தார். ஆனால், இரண்டு மாதங்களாகியும் தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என குற்றம் சாட்டி கடந்த மாதம் 25ஆம் தேதி மருத்துவர்கள் மீண்டும் போராட்டத்தை தொடங்கினர். ஐந்து நாட்களுக்கும் மேலான மருத்துவர்களின் போராட்டத்தால் அரசு மருத்துவமனையை நம்பி இருக்கும் ஏராளமான நோயாளிகள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகினர்.

போராட்டமும் வாபஸ்... பிரேக் இன் சர்வீசும் வாபஸ்: விஜயபாஸ்கர் அறிவிப்பு

இதையடுத்து, தமிழக அரசின் பணி முறிவு எச்சரிக்கை மற்றும் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என்ற உத்தரவாதத்தை ஏற்று மருத்துவர்கள் தங்களது போராட்டத்தை திரும்ப பெற்றனர். இந்நிலையில், புனிதமான பணியை செய்து வரும் மருத்துவர்களுக்கு தமிழக அரசு அநீதி இழைத்து விட்டதாக சென்னை உயர் நீதிமன்றம் சாடியுள்ளது.

மத்திய அரசு நீட் தேர்வை ஏன் திரும்ப பெறவில்லை? சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி

நீட் ஆள்மாறாட்டம் தொடர்பான வழக்கு ஒன்றின் விசாரணையின் போது, 24 மணி நேரமும் பணியில் இருக்கும் அரசு மருத்துவர்களுக்கு ரூ.57,000 தான் ஊதியம் வழங்கப்படுகிறது. இது அரசு பள்ளி ஆசிரியர்களை விட மிக குறைவானது என தெரிவித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு, புனிதமான பணியை செய்து வரும் மருத்துவர்களுக்கு தமிழக அரசு அநீதி இழைத்துவிட்டதாக தெரிவித்தனர்.

அடுத்த செய்தி