ஆப்நகரம்

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு தேதி இதுதான்; ஆன்லைன் வகுப்பிற்கு குட் பை!

தமிழகத்தில் நவம்பர் ஒன்றாம் தேதி முதல் புதிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் தேதி குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Samayam Tamil 2 Nov 2020, 2:56 pm
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழகத்தில் கடந்த மார்ச் 25ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து பல்வேறு தளர்வுகளுடன் அடுத்தடுத்த கட்டங்களால தமிழக அரசு ஊரடங்கை அறிவித்து வருகிறது. இந்த நிலையில் அக்டோபர் மாதத்தில் அறிவிக்கப்பட்ட 9ஆம் கட்ட ஊரடங்கு முடிவடைந்த நிலையில் முக்கிய தளர்வுகளுடன் 10 ஆம் கட்டமாக நவம்பர் மாத இறுதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil TN School Reopen


அதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், 31.10.2020 தினத்துடன் முடியவுள்ள பொது ஊரடங்கு உத்தரவு, ஏற்கெனவே நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளில் கீழ்கண்ட தளர்வுகளுடன், நவம்பர் 30 நள்ளிரவு 12 மணி வரை மேலும் நீட்டிப்பு செய்யப்படுகிறது.

பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டிய அவசியத்தை கருத்தில்கொண்டும், நோய் தொற்றின் தன்மையை கருத்தில் கொண்டும், தமிழ்நாடு முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர மற்ற பகுதிகளில், ஏற்கெனவே அனுமதிக்கப்பட்ட பல்வேறு தளர்வுகளுடன் கிழ்கண்ட பகுதிகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

சசிகலா பயன்படுத்தப்போகும் பிரம்மாஸ்திரம்!

அதன்படி, 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நவம்பர் 16 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்க அனுமதி வழங்கப்படுகிறது. அதேபோல, அனைத்து கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களும் நவம்பர் 16 முதல் வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படுகின்றன.

பள்ளி மற்றும் கல்லூரிகள் மற்றும் பணியாளர்கள் விடுதிகள் உட்பட அனைத்து விடுதிகளும் நவம்பர் 16 முதல் செயல்பட அனுமதிக்கப்படுகின்றன.

அப்சட் ஆன கமல்: ஜாலி மூடில் திமுக, அதிமுக - எல்லாத்துக்கும் அவர்தான் காரணம்!

மதம் சார்ந்த கூட்டங்கள், சமுதாய, அரசியல், பொழுதுபோக்கு கலாச்சார நிகழ்வுகள், கல்வி சார்ந்த விழாக்கள் மற்றும் இவை தொடர்பான கூட்டங்கள் நவம்பர் 16 ஆம் தேதி முதல் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, 100 நபர்கள் பங்கேற்கும் வகையில், நடத்த அனுமதிக்கப்படுகிறது.

கொரோனா காலத்தில் 7 மாதங்களுக்கு பிறகு தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படவுள்ளன. ஆன்லைன் வகுப்புகளுக்கு குட்பை சொல்லிவிட்டு பள்ளிகளுக்கு நடையை கட்ட காத்திருக்கும் மாணவர்கள் போதிய நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அடுத்த செய்தி