ஆப்நகரம்

நவம்பர் 1ஆம் தேதி இனி தமிழ்நாடு நாள்: தமிழக அரசு அரசாணை வெளியீடு!!

தமிழக அரசு நவம்பர் 1ம் தேதியை தமிழ்நாடு நாளாக கொண்டாட அரசாணை வெளியிட்டுள்ளது. இதற்கு நிதியும் ஒதுக்கியுள்ளது.

Samayam Tamil 25 Oct 2019, 12:55 pm
இதுகுறித்து தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் சட்டப்பேரவையில் ஏற்கனவே வெளியிட்டிருந்த அறிவிப்பில், 1956ஆம் ஆண்டு நவம்பர் ஒன்றாம் தேதி, தனித்துவ தமிழ்நாடு உருவாக்கப்பட்டது. அதைப் பெருமைப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் விழா எடுத்து சிறப்பாக கொண்டாடப்படும்'' என்று தெரிவித்து இருந்தார்.
Samayam Tamil Tamil Nadu arasu


இந்த நிலையில் அதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில், இனி வரும் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 1ஆம் தேதி தமிழ்நாடு நாள் என சிறப்பாகக் கொண்டாடப்படும் என்று தெரிவித்துள்ளது.

மருத்துவர்கள் போராட்டத்துக்கு செவிசாய்க்குமா தமிழ்நாடு அரசு?

மேலும் மொழிக்காவலர்கள், தமிழறிஞர்களை சிறப்பிக்க விழா எடுக்கப்படும். தமிழ் மொழியின் சிறப்பை இளைய சமுதாயத்தினர் அறிந்துகொள்ளும் வகையில் கவியரங்கங்கள், பட்டிமன்றம், கருத்தரங்கம், இளையோர் அரங்கம் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படும். இதற்காக ரூ.10 லட்சம் நிதியையும் தமிழ்நாடு அரசு ஒதுக்கியுள்ளது.
ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை முடிவுகள்; இடைக்கால தடை மீண்டும் நீட்டிப்பு - உச்ச நீதிமன்றம்!

அடுத்த செய்தி