ஆப்நகரம்

அனைத்து அலுவலகங்களுக்கும் விடுமுறை: தமிழக அரசு அதிரடி அறிவிப்பு - மொத்தம் 3 நாள்கள்!

ஏப்ரல் 19ஆம் தேதி வெள்ளிக் கிழமை ஊதியத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும் என்று தமிழக அரசின் தொழிலாளர் நலத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

Authored byமரிய தங்கராஜ் | Samayam Tamil 29 Mar 2024, 11:47 am
மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெறுகிறது. தமிழ்நாடு, புதுச்சேரியில் ஏப்ரல் 19ஆம் தேதி வெள்ளிக் கிழமை நடைபெற உள்ளது.
Samayam Tamil office


வாக்குப் பதிவை முன்னிட்டு அன்றைய தினம் பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் விடுமுறை அளிக்கப்பட உள்ளன. பொதுத் தேர்வும் அதற்கு முன்பாகவே முடிவுக்கு வந்துவிடும்.

நூறு சதவீதம் வாக்குப் பதிவை உறுதி செய்யும் விதமாக அனைத்து தனியார் நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையர் சத்திய பிரதா சாகு சில தினங்களுக்கு முன் வலியுறுத்தினார்.
சென்னை மதுபான விடுதி விபத்துக்கு என்ன காரணம்? மெட்ரோ நிர்வாகம் சொன்னது என்ன?
இந்த சூழலில் தமிழ்நாடு தொழிலாளர் நலத் துறை அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், வணிக வளாகங்கள், கடைகள் ஆகியவற்றிற்கு விடுமுறை அறிவிக்க உத்தவு பிறப்பித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “வாக்குப்பதிவு நாளன்று தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், கடைகள் உள்ளிட்ட அரசு மற்றும் அனைத்து தனியார் நிறுவனங்களும் விடுமுறை அளிக்க வேண்டும்.

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் பிபிஓ நிறுவனங்களும் தங்களது பணியாளர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும்

இது தொடர்பாக புகார் அளிக்க மாநில மற்றும் மாவட்ட அளவில் கட்டுப்பாட்டு அறைகளை உருவாக்கி அதற்கான எண்களை பொதுமக்களுக்கு தெரியும் வகையில் விளம்பரப்படுத்த வேண்டும்” என்றும் உத்தரவிட்டுள்ளார்.

மகளிர் உரிமைத் தொகை கிடைக்கவில்லையா? உடனே போன் போட்ட அமைச்சர்!

ஏப்ரல் 19ஆம் தேதி வெள்ளிக்கிழமை விடுமுறையோடு தொடர்ந்து வார இறுதி நாள்கள் விடுமுறையும் வருவதால் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஆர்வம் காட்டுவார்கள். எனவே அந்த தினங்களில் சிறப்பு பேருந்துகள், சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எழுத்தாளர் பற்றி
மரிய தங்கராஜ்
காட்சி தொடர்பியல் துறை பட்டதாரி. சினிமா, அரசியல் சார்ந்து எழுதுவதில் பெரும் விருப்பம் கொண்டவர். டிஜிட்டல் ஊடகத்தில் ஆறு ஆண்டுகள் அனுபவம். தமிழ் சமயம் ஊடகத்தில் சீனியர் டிஜிட்டல் கண்டட் புரொடியூசராக அரசியல் சாந்த செய்திகள், கட்டுரைகளை கடந்த மூன்றாண்டுகளாக எழுதி வருகிறார்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி