ஆப்நகரம்

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி மத்திய அரசுக்கு கடிதம்! தமிழக அரசு அதிரடி

நடப்பாண்டில் நடக்கவுள்ள நீட் தேர்வினை கொரோனா சூழலை கருத்தில்கொண்டு ரத்து செய்ய தமிழக அரசு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.

Samayam Tamil 26 Aug 2020, 9:06 pm
கொரோனா சூழலை கருத்தில் கொண்டு நடப்பாண்டில் நீட் தேர்வை தவிர்க்க வேண்டுமென சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். நடப்பாண்டில் நீட் தேர்வை நடத்தகூடாதெனவும், நீட் தேதியை ஒத்திவைக்கவும் மாநில முதல்வர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
Samayam Tamil file pic


இந்நிலையில் நீட் தேர்வை நடப்பாண்டு முழுமையாக ரத்து செய்ய வேண்டுமென தமிழக அரசு சார்பில் மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தனுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கடிதம் எழுதி கோரிக்கை வைத்துள்ளார்.

மேலும், அக்கடிதத்த்தில் நீட் தேர்வை தவிர்க்கும் வகையில் அவசரச் சட்டம் ஏற்றவும் அமைச்சர் விஜயபாஸ்கர் கேட்டுக்கொண்டுள்ளார். அதேபோல இந்த வருடம் தேர்வு எழுதியுள்ள 12 ஆம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண்களின் அடிப்படையிலேயே எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கையை மேற்கொள்ள ஏற்பாடு செய்யவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

நீட் தேர்வு விவகாரம் குறித்து இன்று மாலை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அதில், பஞ்சாப் மாநில முதல்வர் அமரீந்தர் சிங், சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பேஹல், மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், ஜார்க்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ஆகியோர் கலந்து கொண்டனர் எனபது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி