ஆப்நகரம்

அசத்திய தமிழ்நாடு அரசு; ’போஷன் அபியான்’ திட்டத்தின் கீழ் 3 விருதுகள் வாங்கி குவிப்பு!

’போஷன் அபியான்’ திட்டத்தின் கீழ் சிறப்பான செயல்பாட்டிற்காக தமிழக அரசு 3 விருதுகளை வென்று அசத்தியுள்ளது.

Samayam Tamil 21 Aug 2019, 9:28 am
கடந்த 2014ஆம் ஆண்டு முதல் முறையாக பதவியேற்றுக் கொண்ட மோடி தலைமையிலான பாஜக அரசு, பல்வேறு திட்டங்களை அறிமுகம் செய்தது. அந்த வகையில் 2017ல் ’போஷன் அபியான்’ என்ற திட்டத்தை கொண்டு வந்தது.
Samayam Tamil TN Govt


அதாவது ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத இந்தியாவை உருவாக்க, பல்வேறு அமைச்சகங்கள் ஒன்றிணைந்து இந்த திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதன் நோக்கம் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள மாவட்டங்களை கண்டறிவது.

Also Read: பாஜகவினரைப் போல் பொத்தாம் பொதுவாக பேச முடியாது; அதுக்குத் தான் இப்படி - ஸ்டாலின் விளக்கம்!

அங்கு அங்கன்வாடி சேவைகளை மேம்படுத்துவது. கர்ப்பிணி பெண்கள், தாய்மார்கள், குழந்தைகளுக்கு போதிய ஊட்டச்சத்து உணவுகளை அளித்து குறைபாடுகளை களைவது ஆகும்.

இந்நிலையில் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, 'போஷன் அபியான்’ திட்டத்தின் மூலம் திறன் மேம்பாடு, ஒருங்கிணைப்பு, நடத்தை மாற்றம், சமூக அணி திரட்டல், ஒட்டுமொத்தமாக சிறப்பான செயல்பாடு ஆகியவற்றில் தமிழ்நாடு அரசு சிறந்து விளங்குகிறது.

Also Read: நான் வெளிநாடு கிளம்பறேன்; இனி இவர் தான் எல்லாம்... ஓபிஎஸுக்கு அதிர்ச்சி கொடுத்த ஈபிஎஸ்!

அதேசமயம் 'ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவை - பொது பயன்பாட்டு மென்பொருள்’ அம்சத்தில் தமிழகம் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. இதன்மூலம் மொத்தம் 3 விருதுகளை தமிழக அரசு வென்றுள்ளது.

முதல்முறையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த விருதுகளை, வரும் 23ஆம் தேதி டெல்லியில் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி வெற்றி பெற்ற மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களுக்கு வழங்கி சிறப்பிக்க உள்ளார்.

Also Read: சென்னையில் நீல நிறத்தில் மின்னிய கடல்- ஆபத்தான அறிகுறியா?

அடுத்த செய்தி