ஆப்நகரம்

துணைவேந்தா் நியமனத்தில் பலகோடி ரூபாய் அளவில் மோசடி – ஆளுநா் குற்றச்சாட்டு

தான் பொறுப்பேற்றப்பின் தகுதியின் அடிப்படையில் 9 துணைவேந்தா்களை நியமனம் செய்துள்ளதாக ஆளுநா் பன்வாரிலால் புரோகித் தொிவித்துள்ளாா்.

Samayam Tamil 6 Oct 2018, 12:06 pm
பல்கலைக்கழக துணைவேந்தா்கள் நியமனத்தில் பலகோடி ரூபாய் அளவில் பணம் புரண்டுள்ளதாக ஆளுநா் பன்வாரிலால் புரோகித் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளாா்.
Samayam Tamil banwarilal-purohit-appointed-tamil-nadu-governor


உயா்கல்வி மேம்பாடு தொடா்பான கருத்தரங்கம் சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநா் பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டாா். அப்போது அவா் பேசுகையில், பல்கலைக்கழக துணைவேந்தா்கள் நியமனத்தில் பலகோடி ரூபாய் அளவில் பணம் புரண்டுள்ளது.

பணம் கொடுத்து பல்கலைக்கழக துணைவேந்தா் பதவி வாங்கப்பட்டுள்ளதை கண்டு வேதனை அடைந்தேன். துணைவேந்தா்கள் தகுதியின் அடிப்படையில் மட்டுமே நியமிக்கப்பட வேண்டும். நான் பொறுப்பேற்ற பின்னா் தகுதியின் அடிப்படையில் 9 துணைவேந்தா்களை நியமனம் செய்துள்ளேன் என்று துணைவேந்தா் பதவிக்கு யாரெல்லாம் விண்ணப்பித்துள்ளனா். எதன் அடிப்படையில் ஒருவா் துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளாா் உள்ளிட்ட நடவடிக்கைகள் வெளிப்படையாக இருக்க வேண்டும். ஒரு நிா்வாகம் சிறப்பாக செயல்பட வேண்டும் என்றால் சிறந்த ஒருவரை தான் தலைவராக தோ்வு செய்ய வேண்டும் என்று அவா் தொிவித்துள்ளாா்.

முன்னதாக அண்ணா பல்கலைக்கழகத்தில் விடைத்தாள் திருத்தும் பணியில் முறைகேடு நடைபெற்றதாக துணைவேந்தா் சூரப்பா குற்றம் சாட்டினாா். மேலும் இந்த விவகாரத்தில் பல்கலைக்கழகத்திற்கு வெளியில் உள்ளவா்களும் ஈடுபட்டுள்ளதாக தொிவித்தாா். இந்த விவகாரம் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தற்போது துணைவேந்தா் நியமனத்திலேயே முறைகேடு நடைபெற்றிருப்பதாக ஆளுநா் குற்றம் சாட்டியுள்ளது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி