ஆப்நகரம்

ஊரகப் பகுதிகளில் மீண்டும் உள்ளாட்சி தேர்தலா? என்ன சொல்கிறார் ஆளுநர்?

தேர்தல் நடத்தப்பட்ட ஊரகப் பகுதிகளுக்கு மீண்டும் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுமா என்ற கேள்வியை ஆளுநர் உரை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 21 Jun 2021, 2:55 pm
தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடத்தப்படும் என்று சட்டமன்றத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று (ஜூன் 21) தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.
Samayam Tamil tn local body election


2016ஆம் ஆண்டு நடைபெற்றிருக்க வேண்டிய உள்ளாட்சித் தேர்தல் பல்வேறு காரணங்களால் தள்ளிப்போடப்பட்டு ஒரு வழியாக 2019ஆம் ஆண்டு இறுதியில் ஊரகப் பகுதிகளுக்கு மட்டும் நடத்தப்பட்டது. அதிலும் ஒன்பது மாவட்ட ஊரகப் பகுதிகளுக்கு நடத்தப்படவில்லை. அதில் அதிமுக, திமுகவும் ஏறத்தாழ சம அளவில் வெற்றிபெற்றன.

தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு எப்போது? வெளியாகும் அறிவிப்பு!

பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி மற்றும் ஒன்பது மாவட்ட ஊரகப் பகுதிகளுக்கு எப்போது உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்ற கேள்வி எழுந்தது. திமுக ஆட்சிக்கு வந்ததும் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும். ஆனால் ஏற்கனவே தேர்தல் நடந்த உள்ளாட்சி அமைப்புகள் கலைக்கப்படாது என தேர்தல் அறிக்கை வெளியிட்ட பின்னர் ஸ்டாலின் பேசியிருந்தார்.

ஆனால் ஊரகப் பகுதிகளுக்கு மறு தேர்தல் நடைபெறுமோ என்ற சந்தேகத்தை ஆளுநர் உரை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
நான்கு நாள்களுக்கு மழைதான்: வானிலை ஆய்வு மையம் தகவல்!
“உள்ளாட்சி அமைப்புகளின் தன்னாட்சிக் கொள்கை மீது இந்த அரசு உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளது. இதன் அடிப்படையில் மாநிலத்திலுள்ள ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு இந்த அரசு புத்துயிர் அளிக்கும்”என்று தனது உரையில் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே பதவியில் இருக்கும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு புத்துயிர் அளிப்பது என்றால் மறு தேர்தலா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மேலும், “ 2016 ஆம் ஆண்டு நடைபெற இருந்த உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தல்கள் ஒன்பது மாவட்டங்களில் உள்ள ஊரக அமைப்புகளிலும், அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிலும் நடைபெறவில்லை. முன்னர் மேற்கொள்ளப்பட்ட எல்லை வரைவு அனைத்து வகைகளிலும் முறையாக இருப்பதை உறுதி செய்த பின்னர், கொரோனா பெருந்தொற்றின் தீவிரம் இந்தத் தேர்தலை நடத்துவதற்கான உரிய நடவடிகைகள் மேற்கொள்ளப்படும்”என்றும் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

அதுக்கு வாய்ப்பே இல்லை, கையை விரித்த பிடிஆர்: என்ன செய்வார் மு.க.ஸ்டாலின்?

இதன் காரணமாக தமிழ்நாடு முழுவதும் ஒட்டுமொத்தமாக ஊரக, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு கொரோனா தாக்கம் முடிந்ததும் தேர்தல் நடைபெறும் என்ற பேச்சு திமுக வட்டாரத்தில் எழுந்து வருகிறது.

அடுத்த செய்தி