ஆப்நகரம்

தமிழகத்திலுள்ள சிறிய நகரங்களுக்கு விமான சேவை

தமிழகத்தில் உள்ள சிறிய நகரங்களில் விமான சேவையை துவங்க தமிழக அரசுக்கும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஓப்பந்தம் இன்று கையெழுத்தானது.

TNN 8 Jun 2017, 2:46 pm
சென்னை : தமிழகத்தில் உள்ள சிறிய நகரங்களில் விமான சேவையை துவங்க தமிழக அரசுக்கும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஓப்பந்தம் இன்று கையெழுத்தானது.
Samayam Tamil tamil nadu govt aai sign mou for regional airports
தமிழகத்திலுள்ள சிறிய நகரங்களுக்கு விமான சேவை



மண்டலங்களுக்குள் விமான போக்குவரத்து இணைப்புத் திட்டத்தினை (Regional Connectivity Scheme - UDAN) தமிழகத்தில் செயல்படுத்துவதற்கு ஏதுவாக மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்திற்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி முன்னிலையில் இன்று (8.6.2017) கையெழுத்தானது.

மண்டலங்களுக்குள் விமான போக்குவரத்தை எளிமையாக்கி, குறைவான கட்டணத்தில் சாதாரண மக்களும் விமான பயணம் மேற்கொள்ள ஏதுவாக விமான சேவை வழங்குவது இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது

தமிழகத்தில் முதற்கட்டமாக ஓசூர், சேலம் மற்றும் நெய்வேலி ஆகிய இடங்களில் இத்திட்டத்தின் கீழ் விமானச் சேவைகள் தொடங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இத்திட்டத்தினை செயல்படுத்துவதன் மூலம் சிறிய நகரங்களில் விமானச் சேவைகள் தொடங்கப்பட்டு, அந்நகரங்களின் உட்கட்டமைப்பு வசதிகள் வளர்ச்சி அடைந்து, தொழில் மற்றும் வர்த்தகம் பெருகி, வேலைவாய்ப்புஅதிகரிக்கும் என்று தமிழக அரசு கூறியுள்ளது.

Tamil Nadu govt, AAI sign MoU for regional airports

அடுத்த செய்தி