ஆப்நகரம்

எடப்பாடிக்கு அனுமதி கொடுத்த தமிழக அரசு: ஓபிஎஸ்ஸுக்கு அவகாசம்!

எடப்பாடி பழனிசாமி சென்னையில் உள்ள அரசு பங்களாவில் தொடர்ந்து தங்குவதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

Samayam Tamil 22 May 2021, 9:50 am
முதல்வர், அமைச்சர்கள், சபாநாயகர், எதிர்கட்சித் தலைவர் ஆகியோருக்கு சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அரசு பங்களாக்களில் வீடுகள் ஒதுக்கப்படும்.
Samayam Tamil edappadi palanisamy


ஆட்சி மாற்றத்துக்கு பிறகு முன்னாள் அதிமுக அமைச்சர்கள் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அரசு பங்களாக்களை காலி செய்ய கேட்டுக்கொள்ளப்பட்டார்கள்.

அமமுக இணைப்புக்கு ஓகே சொன்ன எடப்பாடி? ஆனா இது வேற மாதிரி!

அமைச்சர்கள் பலரும் வீடுகளை காலி செய்துள்ள நிலையில் ஓ.பன்னீர் செல்வம் , தனது தம்பி மறைவால் முழுமையாக காலி செய்ய அவகாசம் கேட்டுள்ளார்.

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி 2011 முதல் கிரீன்வேஸ் சாலையில் உள்ள செவ்வந்தி இல்லத்தில் வசித்து வருகிறார். தற்போது அவர் எதிர்கட்சித் தலைவர் பதவி வகிக்கிறார். இது கேபினட் அந்தஸ்துக்கு இணையானது என்பதால் அவர் தொடர்ந்து தங்க தகுதி பெறுகிறார்.

பாஜகவுக்கு பறக்கும் ராஜேந்திர பாலாஜி? மோடியின் மகனுக்கு இப்படியொரு ஸ்கெட்ச்!

பொதுப் பணித்துறையிடம் அவர் தொடர்ந்து தங்க அனுமதி கோரிய நிலையில் தமிழக அரசு அவருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர்கள் பலர் தங்களது பங்களாக்களை காலி செய்த நிலையில் புனரமைப்புப் பணிகள் நடந்து வருகின்றன. புனரமைப்புப் பணிகள் முடிந்த பிறகு திமுக அமைச்சர்களுக்கு பங்களாக்களை பொதுப்பணித்துறை ஒதுக்க உள்ளது.

அடுத்த செய்தி