ஆப்நகரம்

தமிழகத்தில் இன்று முழு ஊரடங்கு; என்னென்ன வசதிகள் கிடைக்கும் தெரியுமா?

தளர்வில்லாத முழு ஊரடங்கு தமிழகம் முழுவதும் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதனால் குறிப்பிட்ட சேவைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 16 Aug 2020, 8:26 am
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா வைரஸ் தொடர்ச்சியான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு வந்தது. இதன் காரணமாக பல்வேறு தொழில்களும் முடங்கி பொருளாதாரம் பெரும் சரிவைச் சந்தித்தது. ஏழை மற்றும் நடுத்தர மக்கள் வாழ்வாதாரத்திற்கு வழியின்றி தவித்தனர். இந்த சூழலில் பொருளாதாரத்தை ஊக்கப்படுத்தும் வகையில் படிப்படியாக தளர்வுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. அதேசமயம் போதிய சரீர இடைவெளி, முகக்கவசம் அணிதல், கை சுகாதாரம் உள்ளிட்டவை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Samayam Tamil Tamil Nadu Lockdown


கொரோனா தொற்றுக்கு மருந்துகள் ஏதுமில்லை. உடல் நோய் எதிர்ப்பு சக்தி ஒன்றே நம்பிக்கையூட்டும் வகையில் இருக்கிறது. இதனை பலப்படுத்துவது தான் முதன்மையானதாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. தடுப்பு மருந்து பரிசோதனைகள் இறுதிக்கட்டத்தை எட்டி வருகின்றன.

இனியும் வேண்டுமா இந்த இ-பாஸ் இம்சை!!

தமிழகத்தில் இன்று காலை நிலவரப்படி 3,32,105 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 2,72,251 பேர் குணமடைந்து விட்டனர். 5,641 பேர் பலியாகியுள்ளனர். 54,213 பேர் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேசமயம் 36.4 லட்சம் கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

இதற்கிடையில் ஞாயிற்றுக்கிழமை தோறும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி தமிழகம் முழுவதும் இன்று காலை முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. காய்கறி, மளிகை உள்ளிட்ட கடைகளுக்கு அனுமதி இல்லை. இறைச்சிக் கடைகளுக்கும் அனுமதியில்லை.

சென்னையில் 2வது நாளாக ஆயிரத்தை கடந்த பாதிப்பு..! இன்று 127 பேர் பலி...

பால், மருந்து கடைகள் மட்டும் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. இன்று முழு ஊரடங்கு காரணமாக நேற்றைய தினமே அத்தியாவசிய பொருட்களை வாங்க கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதில் போதிய சரீர இடைவெளி கடைபிடிக்காமல் இருந்தது அதிர்ச்சி அளிக்கக்கூடிய வகையில் இருந்தது.

அடுத்த செய்தி