ஆப்நகரம்

பென்ஷன்தாரர்களுக்கு அகவிலைப்படி 5% உயர்வு: தமிழக அரசு உத்தரவு!!

பென்ஷன்தாரர்கள் மற்றும் குடும்ப பென்ஷன்தாரர்களுக்கு அகவிலைப்படி 5% அதிகரித்து வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Samayam Tamil 22 Oct 2019, 12:34 pm
தமிழக அரசு பென்ஷன்தாரர்கள் மற்றும் குடும்ப பென்ஷன்தாரர்களுக்கு அகவிலைப்படியை 5% அதிகரித்து வழங்கியுள்ளது. இது கடந்த ஜூலை 1ஆம் தேதி முதல் பொருந்தும் என்று தெரிவித்துள்ளது.
Samayam Tamil EPS 5


இந்த உத்தரவையடுத்து தற்போதைய 12% இருந்து 17%மாக அகவிலைப்படி பென்ஷன்தாரர்களுக்கு அதிகரிக்கும். மத்திய அரசு அதன் பென்ஷன்தாரர்கள் மற்றும் குடும்ப பென்ஷன்தாரர்களுக்கு அகவிலைப்படியை 17% அதிகரித்து கடந்த திங்கள் கிழமை உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்தே இன்று தமிழக அரசும் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

அரசு பென்ஷன்தார்கள், ஆசிரியர் பென்ஷன்தாரார்கள், உள்ளூர் கல்வி நிலையங்கள் மற்றும் பல்வேறு உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றியவர்கள் அனைவருக்கும் பொருந்தும் என்று அரசு இன்று அறிவித்துள்ளது.

‘தீபாவளிக்கு சரக்கு டார்கெட் ரூ. 360 கோடிலாம் கிடையாது’: தமிழ்நாடு அமைச்சர்!

பிரித்துக் கொடுக்கும் வகையில் குடும்ப பென்ஷன் பெறுபவர்களுக்கு சரி சமமாக பங்கிட்டு அகவிலைப்படி வழங்கப்படும் என்பதையும் தெரிவித்துள்ளது.

மதுரையில் இருந்து கோவைக்கு சிறப்பு ஏசி பஸ்கள்!!

திருவாங்கூர் - கொச்சின் சமஸ்தானத்தில் பென்ஷன் பெற்று வந்தவர்கள் 1956, நவம்பர் 1ஆம் தேதி முதல் தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் திருநெல்வேலியில் இருக்கும் செங்கோட்டை தாலுகாவிற்கு மாற்றப்பட்டு இருந்தனர். அவர்களும் தற்போதைய அகவிலைப்படி உயர்வுக்கு பொருந்துவார்கள் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கோவையில் எலி கடித்த 50000 ரூபாய்: செல்லுமா செல்லாதா விரக்தியில் விவசாயி!!

மேலும், விதவைகள், பென்ஷன்தாரர்களின் குழந்தைகள் மற்றும் கருணைத் தொகை பெற்று வருபவர்களுக்கு அரசு தனியாக அறிவிப்புகளை வெளியிடும் என்று கூறப்படுகிறது.

அடுத்த செய்தி