ஆப்நகரம்

அப்துல் கலாம் விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு

சுதந்திர தின விழாவின்போது, முதலமைச்சர் ஜெயலலிதா வழங்கவுள்ள அப்துல் கலாம் விருதுக்கான விண்ணப்பங்களை, அடுத்த மாதம் 8ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

TNN 12 Jun 2016, 4:38 pm
சுதந்திர தின விழாவின்போது, முதலமைச்சர் ஜெயலலிதா வழங்கவுள்ள அப்துல் கலாம் விருதுக்கான விண்ணப்பங்களை, அடுத்த மாதம் 8ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
Samayam Tamil tamil nadu govt welcomes nomination for abdul kalam awards
அப்துல் கலாம் விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு

இதுதொடர்பாக தமிழக அரசின் உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

பாரத ரத்னா டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் விருதினை, முதலமைச்சர் ஜெயலலிதா, இந்த ஆண்டு நடைபெறவுள்ள சுதந்திர தின விழாவின்போது வழங்கவிருக்கிறார். விருது உடன், 5 லட்சம் ரூபாய்க்கான காசோலையும், 8 கிராம் தங்கத்தினால் ஆன பதக்கமும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும்.

விஞ்ஞான வளர்ச்சி, மனிதவியல் மற்றும் மாணவர்கள் நலன் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் தமிழ்நாட்டைச் சார்ந்த ஒருவர் மட்டுமே இவ்விருது பெற தகுதியுடைவர் ஆவார். விரிவான சுயவிவரக் குறிப்பு, உரிய விவரங்களுடன் கூடிய விண்ணப்பம் மற்றும் அதற்குரிய ஆவணங்களுடன், அரசு செயலாளர், உயர்கல்வித்துறை, தலைமைச் செயலகம், சென்னை -600009 என்ற முகவரிக்கு, அடுத்த மாதம் 8ம் தேதிக்கு முன்பாக அனுப்பி வைக்க வேண்டும்.

விருது பெற தகுதி உள்ளவர், இதற்கென அரசால் நியமிக்கப்பட்ட தேர்வுக்குழுவால் தேர்வு செய்யப்படுவார்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி