ஆப்நகரம்

மதுரை கிரானைட் குவாரி அதிபரின் ரூ. 4.7 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம்

அமலாக்கத்துறை அதிகாரிகள் வெளியிட்ட உத்தரவில் மதுரை கிரானைட் குவாரி அதிபரில் ரூ. 4.7 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.

Samayam Tamil 5 Apr 2019, 8:18 pm
மதுரை கிரானைட் குவாரி அதிபர் முகமது சையத்தின் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. அவருக்கு சொந்தமாக வேலூர், கீழவளவு, திருவாதவூர், தும்பைப்பட்டி உள்ளிட்ட இடங்களில் இவருக்கு சொந்தமாக கிரானைட் குவாரிகள் உள்ளன.
Samayam Tamil மதுரை கிரானைட் குவாரி அதிபரின் சொத்துக்கள் முடக்கம்
மதுரை கிரானைட் குவாரி அதிபரின் சொத்துக்கள் முடக்கம்


இந்த குறிப்பிட்ட கிரானைட் குவாரிகளில் அரசு அனுமதித்ததை விட, அதிகளவிலான பாறைகள் உடைத்து எடுக்கப்படுவதாகவும், சட்டத்திற்கு புறம்பாக கிரானைட் பாறைகள் உடைக்கப்பட்டிருப்பதாகவும் காவல்துறை வழக்குப் பதிவு செய்ததிருந்தது.

அதனடிப்படையாக வைத்து அமலாக்கத்துறையும் வழக்குப் பதிவு செய்தது. இந்நிலையில் இப்ராஹீம் சையத்துக்கு சொந்தமான ரூ. 4.70 கோடி மதிப்பலான 45 அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

மேலும் குவாரிக்கான உரிமத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் தனது குடும்ப உறுப்பினர்கள் பெயரில் குவாரிக்கு அருகிலுள்ள சொத்துக்களை சையத் வாங்கி வைத்திருப்பதும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அடுத்த செய்தி