ஆப்நகரம்

06-07-2020 தமிழகத்தில் இன்றைய நாளின் கொரோனா பாதிப்பு நிலவரம் என்ன?

தமிழகத்தில் இன்றைய நாளின் கொரோனா பாதிப்பு நிலவரத்தை பற்றி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Samayam Tamil 6 Jul 2020, 6:23 pm
தமிழகத்தில் இன்று புதிதாக 3827 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 14,978 ஆக உயர்ந்துள்ளது.
Samayam Tamil tamil nadu corona cases


தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க ஜூலை 31ம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் தளர்வுகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ச்சியாக ஒரே விகிதத்தில்தான் நீடித்து வருகிறது. இன்றும் 3,827 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் அதிகபட்சமாக இன்று 1,747 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பானது, 24,052 ஆக அதிகரித்துள்ளது.


இந்நிலையில், இன்று மாநிலத்தில் 3,793 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இன்று குணமானோர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ள நிலையில், மொத்த எண்ணிக்கை 66571 ஆக அதிகரித்துள்ளது.

இன்று மேலும் 61 பேர் பலியாகியுள்ளதை அடுத்து, இதுவரை கொரோனவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,571 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் தற்போது கொரோனா சிகிச்சையிலும், தனிமைப்படுத்தப்படும் 46,833 உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி