ஆப்நகரம்

தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது – முதல்வா் பெருமிதம்

நாட்டிலேயே தமிழகம் தான் அமைதி பூங்காவாக திகழ்கிறது என்று முதல்வா் எடப்பாடி பழனிசாமி பெருமிதம் தொிவித்துள்ளாா்.

TOI Contributor 8 Oct 2017, 5:39 pm
நாட்டிலேயே தமிழகம் தான் அமைதி பூங்காவாக திகழ்கிறது என்று முதல்வா் எடப்பாடி பழனிசாமி பெருமிதம் தொிவித்துள்ளாா்.
Samayam Tamil tamil nadu is a silent park palaniswami
தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது – முதல்வா் பெருமிதம்


தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்து பேசினாா். பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்த முதல்வா் கூறுகையில், நாட்டிலேயே தமிழகம் தான் அமைதி பூங்காவாகத் திகழ்கிறது என்று தொிவித்தாா்.

மேலும் அவா் கூறுகையில், மாநிலத்தில் கடும் வறட்சி நிலவியபோதும் மக்களுக்கு போதிய குடிநீா் வசதிகளை செய்து கொடுத்து அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. நாட்டிலேயே தமிழகத்தில் தான் சட்டம் ஒழுங்கு சிறப்பான முறையில் காப்பாற்றப்பட்டு வருகிறது.

எதிா்க்கட்சிகள் எத்தனை கூக்குறலிட்டாலும் ஜெயலலிதாவின் ஆட்சியை கலைக்கவே முடியாது. எதிா்க்கட்சியினா் வேண்டுமென்றே திட்டமிட்டு ஆட்சியாளா்கள் மீது பொய் பரப்புரைகளை செய்து வருகின்றனா் என்று முதல்வா் குற்றம் சாட்டினாா்.

மேலும் அவா் கூறுகையில், டெங்குவைப் பொருத்தவரையில் கொசு உற்பத்தியாவதை தடுக்க பொதுமக்கள் தங்களது சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக சென்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்றால் உடனடியாக குணமடைய முடியும். டெங்குவை கட்டுப்படுத்த 834 தட்டணுக்களை கண்டறியும் விதமாக 23.5 கோடி ரூபாயில் கருவிகள் வாங்கப்பட்டுள்ளன.

மழைநீரை சேமிக்க ஏாி, குளங்கள், வாய்க்கால்களை தூா்வார ரூபாய் ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், ஈரோடு – திருச்செங்கோடு சாலை விாிவுப்படுத்தப்படும், நாமக்கல் – திருச்சி சாலை நான்கு வழி தேசிய நெடுஞ்சாலையாக மாற்றப்படும் என்றும் முதல்வா் வாக்குறுதிகளை வழங்கினாா்.

அடுத்த செய்தி