ஆப்நகரம்

சீனாவை கதிகலங்க வைக்கும் கொரோனா வைரஸ்; தமிழகத்திற்கு பாதிப்பு வருமா?

உலகை அச்சுறுத்தலில் ஆழ்த்தியுள்ள ஒரு வைரஸ் தமிழகத்திற்கு வராமல் தடுக்க மாநில அரசு செய்துள்ள நடவடிக்கைகள் குறித்து இங்கே காணலாம்.

Samayam Tamil 19 Jan 2020, 11:08 am
கடந்த 2002ஆம் ஆண்டு ’சார்ஸ்’ என்ற வைரஸ் பரவி உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. இதனை கட்டுப்படுத்த முடியாமலும், மருந்து கண்டுபிடிக்க முடியாமலும் விஞ்ஞானிகள் சிரமத்திற்கு ஆளாகினர். இந்த வைரஸ் பாதிப்பால் உலகம் முழுக்க 800 பேர் உயிரிழந்தனர். இதன் தொடக்கம் சீனாவில் தான் ஏற்பட்டது. இந்நிலையில் 18 ஆண்டுகளுக்கு பிறகு அதே சீனாவில் மிகக் கொடிய மற்றொரு வைரஸ் ஒன்று பரவி வருவதாக சொல்லப்படுகிறது.
Samayam Tamil Virus


அந்நாட்டின் வுஹான் மாகாணத்தில் ’கொரோனா’ என்ற வைரஸ் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த வைரஸை கட்டுப்படுத்த உலக சுகாதார நிறுவனத்தின் உதவியை சீன அரசு நாடியுள்ளது.

இன்னைக்கு இப்படியொரு மழை இருக்காம்; எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்!

இது மூச்சு பிரச்சினையை ஏற்படுத்தக் கூடியது. சளி, இருமல் போன்றவை தான் அறிகுறிகள் ஆகும். வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சீனா முழுவதும் சுகாதாரத்துறை பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளது. சீனாவில் அடுத்த ஆண்டு புத்தாண்டு பிறக்க உள்ளது.

இதையொட்டி அந்நாட்டில் இருந்து 1.4 பில்லியன் மக்கள் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்ல வாய்ப்புள்ளது. எனவே ’கொரோனா’ வைரஸ் உலகம் முழுவதும் பரவும் சூழல் ஏற்படக் கூடும் என்று அச்சம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் இருந்து சீனாவில் வுஹான் மாகாணத்திற்கு ஆயிரக்கணக்கானோர் சென்று வருகின்றனர்.

எனவே சான்பிரான்சிஸ்கோ, நியூயார்க், லாஸ் ஏஞ்சல்ஸ் போன்ற விமான நிலையங்களில் சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதேபோல் சீனா செல்லும் இந்தியர்களுக்கும் மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாளை முதல் பால் விலை உயருகிறது; அதுவும் இந்தளவிற்கு; பொங்கி எழுந்த பால் முகவர்கள்!

இந்த வைரஸ் எப்படி பரவுகிறது? அதை தடுக்க மருந்து என்ன? இதன் தோற்றம் எப்படி இருக்கும்? என்று இன்னும் கண்டுபிடிக்கப்பட வில்லை. உலகளவில் இந்த வைரசால் இதுவரை 50 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவர்கள் அனைவரும் சீனாவின் வுஹான் மாகாணத்திற்கு சென்று திரும்பியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தமிழகத்தில் ’கொரோனா’ வைரஸ் பாதிப்பு ஏற்படாமல் இருக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார்.

மறக்காம குழந்தைகளுக்கு போட்ருங்க- இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்!

இதுபற்றி செய்தியாளர்களிடம் கூறுகையில், வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு விமான நிலையத்தில் தீவிர சோதனை நடத்தப்படுகிறது. தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகளை மாநில அரசு எடுத்து வருகிறது. யாரும் அச்சம் கொள்ள வேண்டாம்.

தொற்று நோய் நடவடிக்கைகளில் தமிழக அரசு எப்போதும் சிறப்பான நடவடிக்கைகள் எடுக்கும். நிப்பா, எபோலா போன்ற வைரஸ் பாதிப்புகளின் போது எடுக்கப்பட்டு நடவடிக்கைகள் மூலம் தமிழகம் பாதுகாப்பாக இருந்ததை உதாரணமாக கூறலாம் என்று தெரிவித்தார்.

அடுத்த செய்தி