ஆப்நகரம்

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை எப்போது?

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று தமிழக தேர்தல் ஆணையர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

Samayam Tamil 23 Dec 2019, 10:44 am
தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறவில்லை. இதுதொடர்பாக பல்வேறு வழக்குகள் நீதிமன்றத்தில் தொடரப்பட்டன. இவற்றில் நீண்ட காலமாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில், ஒருவழியாக உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியானது.
Samayam Tamil Election Commission


அதன்படி, வரும் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக கடந்த 2ஆம் தேதி தமிழக தேர்தல் ஆணையர் பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

களத்தில் மோதும் போட்டியாளர்கள் யார்?- வெளியானது இறுதி வேட்பாளர் பட்டியல்!

அதன்படி, ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டது. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு பின்னர் தேதி அறிவிக்கப்படும் எனக் கூறப்பட்டது. இந்நிலையில் டிசம்பர் 6ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கி, டிசம்பர் 13 வரை நடைபெற்றது.

இதில் சுமார் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இவற்றின் மீது டிசம்பர் 16ஆம் தேதி பரிசீலனை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது.

ஓட்டு போட்டால் துட்டு - என்ன சொல்ல வருகிறார் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்?

மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 3,839, ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் 32,571, கிராம ஊராட்சி தலைவர் 53,133, கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் 2,00,741 பேர் போட்டியிடுகின்றனர்.

இதுதொடர்பான முழு விவரங்கள் https://tnsec.tn.nic.in/nomination என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

வேண்டாம் - ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்களுக்கு தலைமை எச்சரிக்கை!

முதல்கட்ட வாக்குப்பதிவு வரும் 27ஆம் தேதி நடைபெறுகிறது. இரண்டாம்கட்ட வாக்குப்பதிவு 30ஆம் தேதி நடக்கிறது. காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடத்தப்படும்.

வரும் ஜனவரி 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதையடுத்து மறைமுகத் தேர்தல் கூட்ட நாள் வரும் ஜனவரி 11ஆம் தேதி நடக்கிறது.

அடுத்த செய்தி