ஆப்நகரம்

3200 அடி உயர மலையில் இருந்து விழுந்த பக்தர்!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மலைக்கோயில் ஒன்றில் நேர்த்திக்கடன் நிறைவேற்றச் சென்றவர் 3200 அடி ஆழத்தில் விழுந்து இறந்தார்.

Times Now 16 Oct 2017, 6:30 pm
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மலைக்கோயில் ஒன்றில் நேர்த்திக்கடன் நிறைவேற்றச் சென்றவர் 3200 அடி ஆழத்தில் விழுந்து இறந்தார்.
Samayam Tamil tamil nadu man falls to death from temple at 3200 feet while performing a banned ritual
3200 அடி உயர மலையில் இருந்து விழுந்த பக்தர்!

நாமக்கம் மாவட்டத்தில் உள்ள சஞ்சீவராஜா பெருமாள் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற தலமாகும். இந்த மலைக்கோயிலை மூன்று முறை சுற்றி வந்து வணங்கும் வழக்கம் இருந்து வந்தது. ஆபத்தான மலைப்பாதையில் கோயிலை வலம் வருவதால் பல உயிரிழப்புகள் ஏற்படுகின்றன என்பதால் மலையைச் சுற்றிவர தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று ஆறுமுகம் என்ற ஆட்டோ ஓட்டுநர் தனது நேர்த்திக்கடனை நிறைவேற்ற மலையைச் சுற்றி வந்திருக்கிறார். மூன்றாவது சுற்றை நிறைவு செய்யும் முன்பாக, மழை பெய்து வழுக்கலாக இருந்த இடத்தில் கால் இடறி கீழே அதளபாதாளத்தில் விழுந்து இறந்துள்ளார்.

அடுத்த செய்தி