ஆப்நகரம்

ஆவின் விற்பனை விலை இவ்ளோ ஏறிடுச்சா? - பால் முகவர்கள் சங்கம் அதிர்ச்சி!

இன்று முதல் அமலுக்கு வந்துள்ள ஆவின் விற்பனை விலை உயர்விற்கு பால் முகவர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

Samayam Tamil 14 Jul 2020, 1:36 pm
ஆவின் நெய் விற்பனை லிட்டருக்கு ரூ.20 முதல் ரூ.50 வரையிலும், சமையல் வெண்ணெய் விற்பனை விலை ஒரு கிலோ ரூ.20 முதல் ரூ.30 வரையிலும் உயர்ந்தப்பட்டுள்ளது. இது இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்து பால் முகவர்கள் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், கடந்த வாரம் ஆவின் நிறுவனம் சார்பில் 5 வகையான பால் மற்றும் பால் பொருட்களை தமிழக முதலமைச்சர் அறிமுகம் செய்து வைத்தார். அதில் மோர், லஸ்ஸி மற்றும் 90 நாட்கள் கெட்டுப் போகாத பால் ஏற்கனவே வணிக சந்தையில் விற்பனையில் உள்ளது.
Samayam Tamil Aavin Price Hike


இதனை சிறு மாற்றங்களோடு புதிய பொருட்களாக சித்தரிக்கப்படுவதாக தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் சுட்டிக் காட்டப்பட்டது. ஏற்கனவே கொழுப்பு சத்து செரிவூட்டப்பட்ட பால் (ப்ரீமியம் கொழுப்பு சத்து 6.0% திடசத்து 9.0%) விற்பனையில் இருக்கிறது. தற்போது அதில் வெறும் 0.5% கொழுப்பு சத்தை கூடுதலாக்கி, பாக்கெட் வண்ணத்தை மாற்றி அதற்கு "டீ மேட் பால்" என பெயரிட்டு 1 லிட்டருக்கு ரூ.9 கூடுதலாக விலை வைத்து ரூ.60 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

முதல்வருக்கே கொரோனா பரிசோதனையா? அப்படி என்ன ஆச்சு?

இதைக் கண்டித்து "தனியார் பால் நிறுவனங்களைப் போல் தன்னிச்சையாக செயல்பட ஆவின் திட்டமிடுகிறதோ...?" என்கிற சந்தேகத்தை எங்களது சங்கத்தின் சார்பில் வெளிப்படுத்தி இருந்தோம். தற்போது எங்களது சந்தேகத்தை உறுதி செய்யும் விதமாக ஆவின் நிர்வாகம் தனது செயல்பாடுகளை தொடங்கியுள்ளது. பல்வேறு ஆவின் பொருட்களின் விலையை உயர்த்தி நேற்று சுற்றறிக்கை வெளியிடப்பட்டது. உடனடியாக இன்று முதல் அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சர்வாதிகாரி போல் ஆவின் நிர்வாகம் நடந்து கொண்டிருப்பதையே காட்டுகிறது.

இதனை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. ஊரடங்கு காரணமாக தேனீர் கடைகள், உணவகங்கள், கேண்டீன்கள் எல்லாம் செயல்படாமல் இருக்கும் சூழலில், செயல்படும் சிலவற்றிலும் பார்சல் மட்டுமே அனுமதி என்கிற நிலை இருப்பதால் வணிக ரீதியிலான பால் விற்பனை என்பது முற்றிலும் குறைந்து போய் விட்டது. இந்நிலையில் தேனீர் கடைகள், உணவகங்கள் பெயரைச் சொல்லி "டீ மேட் பால்" என அறிமுகம் செய்து ஆவின் நிர்வாகமும் அதற்கு அனுமதி அளித்த தமிழக அரசும் ஏழை, எளிய, நடுத்தர மக்களின் வயிற்றில் அடிக்க பார்க்கிறது.

கூடுதுப்பா அமைச்சரவை, ஒரே பரபரப்பாவே இருக்கே!

எனவே உயர்த்தப்பட்ட நெய் மற்றும் சமையல் வெண்ணை, டீ மேட் பால் போன்றவற்றின் விற்பனை விலையை உடனடியாக குறைக்க வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் கேட்டுக் கொள்வதாக தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி