ஆப்நகரம்

Nanjil Sampath:மீ டூ காரணத்தால் தான் சிலர் அரசியலில் நுழைந்ததும், வேட்பாளர் ஆக முடிகிறது - நாஞ்சில் சம்பத்

மீ டூ சினிமாவில் மட்டுமல்ல அரசியலில் இருக்கிறது, மறுக்க முடியாது என நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 2 Nov 2018, 12:13 pm
சென்னை : தமிழக அரசியலில் கூட மீ டூ இருக்கிறது என நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.
Samayam Tamil Nanjil Sampath

மீ டூ என்ற ஹேஷ்டேகை பயன்படுத்தி பெண்க் தங்களுக்கு நடந்த பாலியல் வன்கொடுமைக் குறித்து டுவிட்டரில் அம்பலப்படுத்தி வருகின்றனர். இந்த மீ டூ இயக்கமாக மாறி வருகின்றது. இந்த விவகாரம் சினிமா துறையில் நடக்கும் அவலங்களை வெளிக்கொண்டு வந்துள்ளது.

நாஞ்சில் சம்பத் பேட்டி :
மீ டூ விவகாரம் தொடர்பாக நாஞ்சில் சம்பத்திடம் ஒரு செய்தியாளர், அரசியலில் மீ டூ இருக்கிறதா என கேட்டார். அதற்கு நிச்சயம் இருக்கிறது. இது பெரியார் பூமி என்பதெல்லாம் இருக்கட்டும். ஒரு சில பெண்கள் அரசியலுக்கு வந்ததும், திடீரென சட்டமன்ற தேர்தல் வேட்பாளர்களாக ஆகி விடுகின்றனர். இதற்கு காரணம் மீ டூ தான்.

ஜெயக்குமார் விவகாரம் :

ஜெயக்குமார் சர்ச்சையை குறித்து கேட்டதற்கு, “ஜெயக்குமார் விவகாரம் அருவெறுப்பாக இருந்தது. இப்படி வந்திருக்கக் கூடாது. ஏன் இப்படி நடந்து கொண்டார் என யோசிக்கும் மனநிலையில் தான் இருந்தேன்.

ஒரு தனிமனித பலவீனத்தை செய்தி ஆக்கக்கூடாது என நினைக்கிறேன். அதே சமயம் அதன் மூலம் யாரேனும் பாதிக்கப்பட்டிருந்தால், அவருக்கு நியாயம் கண்டிப்பாக கிடைக்க வேண்டும்” என்றார்.

அடுத்த செய்தி