ஆப்நகரம்

10 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழகம், புதுச்சேரியில் அடுத்த சில நாள்களுக்கான வானிலை முன்னறிவிப்பு வெளியாகியுள்ளது.

Samayam Tamil 5 Jun 2021, 2:54 pm
தென் மேற்கு பருவமழை இன்று தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் முன்னேறியுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் முன்னேற வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Samayam Tamil tamil nadu rains


வெப்பச்சலனம் மற்றும், குமரிக்கடல் மற்றும் இலங்கை ஒட்டி (3.1 முதல் 4.6 கிலோ மீட்டர் உயரம் வரை) நிலவும் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. கோவா,கர்நாடக கடலோர பகுதி முதல் தென் தமிழ்நாடு வரை (1 கிலோ மீட்டர் உயரத்தில்) நிலவும் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.
ஜூன் 14 வரை ஊரடங்கு: எதெற்கெல்லாம் அனுமதி? முழு விவரம்!இதன்காரணமாக இன்று (ஜூன் 5) விருதுநகர், மதுரை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும்,, ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், பெய்யக்கூடும்.

ஜூன் 6ஆம் தேதி தமிழ் நாட்டின் ஒரு சில வட உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

ஜூன் 7ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் .
தமிழ்நாட்டில் தொடரும் ஊரடங்கு: என்னென்ன கட்டுப்பாடுகள், தளர்வுகள்?
ஜூன் 8, 9 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டின் தென் கடலோர மாவட்டங்கள், மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருபுவனம் (சிவகங்கை) 12, காரையூர் (புதுக்கோட்டை) 9,எட்டயபுரம் (தூத்துக்குடி) 8, பேரையூர் (மதுரை) 7, தண்டராம்பேட்டை (திருவண்ணாமலை), புள்ளம்பாடி (திருச்சிராப்பள்ளி தலா 6, பெரம்பலூர் , கரூர் (தர்மபுரி) தலா 5, கொடைக்கானல், அரவக்குறிச்சி (கரூர் ) , பெரியாறு (தேனி), தளி தலா 4 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
ஓபிஎஸ் ஆடியோ ரிலீஸாகுமா? ரூட்டை மாற்றும் சசிகலா - தி.நகர் டூ பெசன்ட் நகர்
மீனவர்களுக்கான எச்சரிக்கை :

இன்று கேரளா மற்றும், கர்நாடக கடலோர பகுதிகள், லட்சத்தீவு , மாலத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

ஜூன் 8,9 ஆகிய தேதிகளில் கேரளா மற்றும், கடலோர பகுதிகள், லட்சத்தீவு, பகுதிகளில் பலத்த காற்று காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் மேற்குறிப்பிட்ட தேதிகளில் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அடுத்த செய்தி