ஆப்நகரம்

தமிழக அரசு கொடுத்த ஷாக்: நில அளவை கட்டணம் இத்தனை மடங்கு உயர்வா?

தமிழ்நாடு வருவாய் துறை நில அளவை, உட்பிரிவு செய்தல், எல்லை வரைபட பிரதிகள் பெறுவது தொடர்பான, 14 வகை கட்டணங்களை உயர்த்தி உத்தரவிட்டுள்ளது.

Samayam Tamil 25 Jul 2020, 10:40 am
நில அளவை மற்றும் நிலவரித் திட்டம் தொடர்பான அரசாணையை தமிழக அரசின் வருவாய்துறை வெளியிட்டுள்ளது. அந்த அரசாணையில், நில அளவை உட்பிரிவு அமைத்தால் மேல்முறையீடு வழங்குவதற்கான கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
Samayam Tamil land survey


அத்துறைச் செயலர் அதுல்ய மிஸ்ரா பிறப்பித்துள்ள உத்தரவில், கிராம, வட்ட, மாவட்ட வரைபடங்கள் வழங்குவதற்கும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. புல அளவீட்டு புத்தகம் பிரதி (A4) 20 ரூபாயிலிருந்து 50 ரூபாய் ஆக உயர்த்தப்பட்டுள்ளது. புல அளவீட்டு புத்தகம் பிரதி (A3)100 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

புல எல்லைகளை சுட்டிக்காட்டும் கட்டணம் 20 ரூபாயிலிருந்து 200 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்லது. கோணமானி மூலம் பக்க எல்லைகளை சுட்டிக்காட்ட 30 ரூபாயிலிருந்து 300 ரூபாய் கட்டண உயர்வு செய்யப்பட்டுள்ளது. பராமரிப்பு நில அளவரின் முடிவுக்கு எதிரான மேல்முறையீட்டிற்கு கட்டணம் 50 ரூபாயிலிருந்து 400 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. புல எல்லைகளை நிர்ணயித்து சுட்டிக்காட்ட புன்செய் நிலத்திற்கு 30 ரூபாயிலிருந்து 1,000 ரூபாயாகவும் நன்செய் நிலத்திற்கு 50 ரூபாயிலிருந்து 2,000 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

39 ரூபாயில் கொரோனா தடுப்பு மருந்து: விற்பனையில் வேகம் காட்டும் நிறுவனங்கள்!

மேல் முறையீட்டின் பேரில் மறு அளவீட்டு புன்செய் நிலத்திற்கு 60 ரூபாயிலிருந்து 2,000 ரூபாயாகவும், நன்செய் நிலத்திற்கு 60 ரூபாயில் இருந்து 4,000 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. மாவட்ட வரைபடத்திற்கான கட்டணம் 189 ரூபாயிலிருந்து 500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மாவட்டத்திற்கான எல்லைக்கோடு வரைபட கட்டணம் 51 லிருந்து 500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. வட்ட வரைபடத்திற்கான (வண்ணம்) கட்டணம் 357 ரூபாயிலிருந்து 1,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

நில அளவை தொடர்பாக அமைக்கப்பட்ட குழு அளித்த பரிந்துரையை ஏற்று பத்து மடங்கு வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி