ஆப்நகரம்

என்னது ஆல் பாஸ் கிடையாதா; 9, 10, 11ஆம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு இருக்கா?

முதல்வர் பழனிசாமி ஆல் பாஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில், புதிய சந்தேகத்திற்கு கல்வித்துறை அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.

Samayam Tamil 26 Feb 2021, 6:42 am
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலைக் கருத்தில் கொண்டு பள்ளி, கல்லூரிகள் திறப்பு தள்ளி போடப்பட்டு வந்தது. இந்த சூழலில் கடந்த டிசம்பர் மாதம் கல்லூரிகள் திறக்கப்பட்ட நிலையில், ஜனவரி மாதம் 10 மற்றும் 12ஆம் வகுப்பிற்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. இதையடுத்து பிப்ரவரி 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கின.
Samayam Tamil tamil nadu school education department clarified public exams for cbse 9 10 11th standard students
என்னது ஆல் பாஸ் கிடையாதா; 9, 10, 11ஆம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு இருக்கா?


எளிய முறையில் பொதுத்தேர்வு

நடப்பு கல்வியாண்டு நிறைவு பெறுவதற்கு இன்னும் ஒன்றரை மாதங்கள் மட்டுமே இருக்கின்றன. இந்த சூழலில் மாணவர்களின் சுமையை குறைக்கும் வகையில் முன்கூட்டியே பாடத்திட்டம் சுமார் 40 சதவீதம் குறைக்கப்பட்டது. எஞ்சிய பகுதிகளில் இருந்து தேர்விற்கு தயாரானால் போதும். அதிலிருந்தும் எளிமையான வகையில் புதிய மாற்றங்களுடன் வினாத்தாள் வடிவமைக்கப்படும். எனவே மாணவர்களுக்கு எந்தவித சிக்கலும் இருக்காது என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் அமைச்சர் செங்கோட்டையன் விளக்கமளித்திருந்தார்.

தேர்வின்றி ஆல் பாஸ்

இந்த சூழலில் யாரும் எதிர்பார்த்திராத வகையில் 9, 10, 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வின்றி அனைவரும் தேர்ச்சி என்ற இன்ப அதிர்ச்சியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கியுள்ளார். இதுதொடர்பாக நேற்று அவர் பேசுகையில், கொரோனா வைரஸ் பரவல் சூழலை கருத்தில் கொண்டு மாணவர்கள் நலன் கருதி நடப்பாண்டு 9ஆம் வகுப்பு முழு ஆண்டுத் தேர்வும், 10, 11ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகளுக்கு ரத்து செய்யப்பட்டு, அனைவரும் தேர்ச்சி செய்யப்படுவதாக அறிவித்தார்.


ஹேப்பி நியூஸ் சொன்ன முதல்வர்: 9,10,11 மாணவர்கள் ‘ஆல் பாஸ்’!

2வது ஆண்டாக பொதுத்தேர்வு ரத்து

கடந்த கல்வியாண்டைப் பொறுத்தவரை கடைசி நேரத்தில் தான் கொரோனா தொற்று பரவத் தொடங்கியது. அதன்பிறகு தொடர்ச்சியான ஊரடங்குகளால் பொதுத்தேர்வு தள்ளிப் போனது. பின்னர் நீதிமன்ற அறிவுறுத்தலின்பேரில் ஒன்று முதல் 10ஆம் வகுப்பு வரை தேர்வின்றி அனைவரும் தேர்ச்சி என்று தமிழக அரசு அறிவித்தது. ஆனால் நடப்பு கல்வியாண்டில் படிப்படியாக கொரோனாவில் இருந்து மீண்டும் வந்து கொண்டிருக்கிறோம்.

தேர்தல் வியூகமா?

பொதுத்தேர்வு நடத்த போதிய சூழல் இருக்கிறது. அதற்கேற்ப முன்கூட்டியே பள்ளிகள் திறக்கப்பட்டு புதிய சூழலுக்கு தக்கபடி மாணவர்கள் தங்களை தக்கவைத்துக் கொண்டு வருகின்றனர். பாடத்திட்ட குறைப்பும் மாணவர்களுக்கு சற்று நிம்மதியை அளித்தது. அப்படியிருக்கையில் திடீரென பொதுத்தேர்வு ரத்து அறிவிப்பு தேர்தல் வியூகமாக என்று பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.


மீண்டும் ஒரு வெற்றியை ருசிப்பாரா அருள்நிதி?

வகுப்புகள் கட்டாயம்

இதற்கிடையில் அனைவரும் தேர்ச்சி என்று அறிவித்துவிட்டதால் இனி பள்ளிகளுக்கு செல்ல தேவையில்லை என்று சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின. இதுபற்றி விளக்கமளித்த பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள், வதந்திகளை நம்ப வேண்டாம். 9, 10, 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வழக்கம் போல் வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும். நடப்பாண்டிற்கான பாடங்களை நடத்தி முடிக்க வேண்டும். இல்லையெனில் அடுத்த ஆண்டிற்கான கற்றல் பாதிக்கப்படும்.


9,10,11 மாணவர்கள் ஆல்பாஸ்: இருந்தாலும் ஸ்கூலுக்கு கிளம்புங்க - அமைச்சர் உறுதி

சிபிஎஸ்இ-க்கு பொருந்தாது

இதனால் கற்றல் குறைபாடு ஏற்படவும் வாய்ப்புள்ளது. அதுமட்டுமின்றி மாணவர்கள் தேர்ச்சிக்கு வருகைப் பதிவேடும் கருத்தில் எடுத்துக் கொள்ளப்படும். எனவே மாணவர்கள் அனைவரும் கட்டாயம் பள்ளிக்கு வர வேண்டும். இந்த தேர்வு ரத்து அறிவிப்பானது சிபிஎஸ்இ உள்ளிட்ட இதர பாடத்திட்டங்களில் பயிலும் மாணவர்களுக்கு பொருந்தாது. எனவே திட்டமிட்டபடி சிபிஎஸ்இ மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறும். அதற்கேற்ப மாணவர்கள் தயாராக வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி