ஆப்நகரம்

ஆசிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்: பள்ளிக் கல்வித் துறை அதிரடி!

ஆசிரியர்களுக்கு கடன் உதவி திட்டத்தை பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

Samayam Tamil 9 Jul 2021, 10:28 am
தமிழ்நாட்டில் பள்ளிகள், கல்லூரிகள் எப்போது திறக்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது. மருத்துவ வல்லுநர்களுடன் கலந்தாலோசித்து நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியிருந்தார்.
Samayam Tamil tn school teachers


நேரடி வகுப்பு தொடங்காவிடினும் மாணவர் சேர்க்கைக்காக ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு சென்று வருகின்றனர். ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் கல்லூரிகளிலும் அதைத் தொடர்ந்து பள்ளிகளிலும் நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.

தமிழ்நாட்டில் ஊரடங்கில் என்னென்ன தளர்வுகள்? எதற்கெல்லாம் வாய்ப்பு?

ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் தனியார் பள்ளிகள் ஆசிரியர்களின் நிலை மிகவும் பரிதாபத்துக்குரியதாக மாறிவிட்டது. ஆசிரியர்கள் பலர் தினக்கூலிகளாக கட்டிட வேலைக்கும், பேக்கரி வேலைக்கும் என பல வேலைகளுக்கு சென்றுள்ளனர். வருமானமில்லாமல் வறுமையின் பிடியில் சிக்கியுள்ளனர்.

தனியார் பள்ளி ஆசிரியர்கள் வாழ்வாதாரம் காக்கப்படும் நோக்கில் அரசு நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் அன்பில் மகேஷ் சமீபத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பள்ளிக்கல்வி இணை இயக்குனர் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் ஆசிரியர்களுக்கு ரூ.6 லட்சம் முதல் ரூ.14 லட்சம் வரை கடன் உதவி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சசிகலாவை இப்படியா பேசினார் எடப்பாடி? ஓபிஎஸ் இனி காட்டுவாரா அதிரடி?

ஆசிரியர்கள் திருமணம் செய்யவும், புதிய பைக், கார் வாங்கவும் கடன் உதவி அளிக்கப்படும் என்றும் கடன் உதவி திட்டத்தை ஆசிரியர்கள், கல்வித்துறை பணியாளர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி