ஆப்நகரம்

தொடக்க கல்வி இயக்குநர் சுற்றறிக்கை- 8ஆம் வகுப்பு மாணவர்கள், ஆசிரியர்கள் ‘ஷாக்’!

தமிழகத்தில் பயிலும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய உத்தரவு ஒன்றை தொடக்க கல்வி இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

Samayam Tamil 29 Jan 2020, 9:05 am
நாடு முழுவதும் 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், இந்த உத்தரவை செயல்படுத்துவது பற்றி பரிசீலனை செய்து வருவதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.
Samayam Tamil Students


அதேசமயம் நடப்பு கல்வியாண்டில் 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த உரிய ஏற்பாடுகளை தமிழக அரசு செய்து வருகிறது. இந்த பொதுத்தேர்வு மாணவர்களிடம் பெரும் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் என்று கல்வியாளர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

அடடே புதுசா 2, மொத்தமா 11; குவியும் அரசு மருத்துவ கல்லூரிகள்- தேங்ஸ் டூ மோடி!

பொதுத்தேர்வை கண்டித்து போராட்டங்கள் நடத்தப் போவதாக பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் கூறியுள்ளன. இதற்கிடையில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், இந்த ஆண்டு 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும்.

அடுத்த ஆண்டு தேர்வை ரத்து செய்வது பற்றி பரிசீலிக்கப்படும் என்று தெரிவித்தார். இந்நிலையில் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் தொடக்க கல்வி இயக்குநர் சுற்றறிக்கை ஒன்றை இன்று அனுப்பியுள்ளார்.

அதில், 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாலை வேளைகளில் ஒரு மணி ஒதுக்கி சிறப்பு வகுப்பு நடத்த வேண்டும். முதல் இரண்டு பருவங்களில் 30 மதிப்பெண்களுக்கு மாதிரி வினாத்தாள் தயார் செய்து தேர்வு நடத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆச்சரியமாய் சரிந்த வெங்காயத்தின் விலை - இல்லத்தரசிகள் செம ஹேப்பி!

இது 8ஆம் வகுப்பு ஆசிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடப்பாண்டில் 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வை எப்படி சமாளிக்கப் போகிறார்கள் என்று கேள்வி எழுந்துள்ளது.

அடுத்த செய்தி