ஆப்நகரம்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு: தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் அக்டோபர் 1ஆம் தேதி முதல் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்கள் விருப்பத்தின் பேரில் பள்ளிக்கு வரலாம் என அரசு அறிவித்துள்ளது.

Samayam Tamil 24 Sep 2020, 3:44 pm
பள்ளி, கல்லூரிகள் ஆறு மாதத்துக்கும் மேலாக மூடப்பட்டுள்ள நிலையில் மத்திய அரசு 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்கள் விருப்பத்தின் பேரில் பள்ளிகளுக்கு வரலாம் என அறிவித்திருந்தது. செப்டம்பர் 21ஆம் தேதி முதல் வட மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.
Samayam Tamil tn school open date


இந்நிலையில் தமிழகத்தில் எப்போது பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்ற கேள்வி தொடர்ந்து முன்வைக்கப்பட்டது. ஆனால் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பள்ளிகள் திறப்பு குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை என திட்டவட்டமாக அறிவித்து வந்தார்.

இதனால் தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு மேலும் தாமதமாக வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. இருப்பினும் இ பாஸ் ரத்து, பொது போக்குவரத்துக்கு அனுமதி ஆகிய அறிவிப்புகளுக்கு முன்னரும் தமிழக அரசு அது தொடர்பான அறிவிப்பை வெளியிட தயக்கம் காட்டி வந்தது. மத்திய அரசு தளர்வுகளை அறிவித்தபின் அதை பின்தொடர்ந்து தமிழகத்திலும் அறிவிப்புகள் வெளியாகின.

எனவே பள்ளிகள் திறப்பிலும் மத்திய அரசின் முடிவை தமிழக அரசு பின்பற்றி விரைவில் தேதி அறிவிக்க வாய்ப்புள்ளதாக நமது சமயம் தமிழில் குறிப்பிட்டு வந்தோம்.

இந்நிலையில் இன்று பள்ளிகள் திறப்பு குறித்த முக்கிய அறிவிப்பை தமிழக அரசு அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது.

சசிகலா விடுதலை? தொண்டர்களை தயார்படுத்தும் டிடிவி தினகரன்

அக்டோபர் 1ஆம் தேதி முதல் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிகளுக்கு விருப்பத்தின் பேரில் செல்லலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் 10 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்கள் பாடங்களில் உள்ள சந்தேகங்களை போக்க விருப்பத்தின் பேரில் பள்ளிக்கு வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

திமுக எம்.எல்.ஏ.க்கள் மீதான 2ஆவது உரிமை மீறல் நோட்டீசுக்கு இடைக்காலத் தடை

அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 50 சதவீதம் மட்டுமே ஆசிரியர்கள் பள்ளிக்கு வர அனும்தியளிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி