ஆப்நகரம்

தமிழக அரசு சார்பில் பிரமாண்டமான திரைப்பட விழா

தமிழக அரசு சார்பில் விரைவில் பிரமாண்டமான திரைப்பட விழா நடத்தப்படும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.

Samayam Tamil 25 Jun 2018, 5:53 pm
தமிழக அரசு சார்பில் விரைவில் பிரமாண்டமான திரைப்பட விழா நடத்தப்படும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.
Samayam Tamil 128219_thumb_665


சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற செய்தி மற்றும் விளம்பரத்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் திமுக எம்.எல்.ஏ. எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்துப் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ,

“குறைந்த செலவில் தயாரித்த 149 படங்களுக்கு தலா ரூ.7 லட்சம் வீதம் ரூ.10 கோடியே 43 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. 2009 முதல் 2016 வரை விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. சின்னத்திரைக்கும் விருதுகள் வழங்கப்பட உள்ளது.

விரைவில் பிரமாண்டமான திரைப்பட விழா நடைபெற இருக்கிறது. அதில் சினிமா மற்றும் டிவி நட்சத்திரங்கள் கௌரவிக்கப்படுவார்கள்.

சிவாஜி சிலை, நீதி மன்ற உத்தரவுப்படி கடற்கரை சாலையில் இருந்து அகற்றப்பட்டது என்றாலும், தற்போது சிவாஜி மணி மண்டபத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.” என்று கூறினார்.

அடுத்த செய்தி