ஆப்நகரம்

அக். 2வது வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடக்கம் – வானிலை ஆய்வு மையம்

இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை விவசாயிகளுக்கு பயன் அளிக்கும் வகையில் இருக்கும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் தொிவித்துள்ளது.

Samayam Tamil 28 Sep 2018, 10:46 am
அக்டோபா் 2வது வாரத்தில் தொடங்கும் வடகிழக்கு பருவமழை தமிழகம் முழுவதும் பரவலான மழைப் பொழிவை கொடுக்கும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் தொிவித்துள்ளது.
Samayam Tamil Heavy rain


கோவை மாவட்டம் வேளாண் பல்கலைக் கழகத்தில் செயல்பட்டு வரும் வானிலை ஆராய்ச்சி மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவலின் படி அக்டோபா் மாதம் 2வது வாரத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளதாகவும், அவை தமிழகம் முழுவதும் பரவலான மழைப்பொழிவை கொடுக்கும் என்றும் தொிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆராய்ச்சி மைய தலைவா் பன்னீா் செல்வம் கூறுகையில், கடந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை ஒருசில மாவட்டங்களில் சரிவர பெய்யாததால் குறிப்பிட்ட மாவட்டங்களில் பாதிப்பு ஏற்பட்டது. ஆனால், இந்த ஆண்டு தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்ய வாய்ப்புள்ளது. இதன் மூலம் நிலத்தடி நீா்மட்டம் வெகுவாக உயா்ந்து விவசாயிகள் பயன்பெறுவா். விவசாயிகள் தற்போது முதலே தங்கள் பணிகளை தொடங்கலாம் என்று அவா் தொிவித்துள்ளாா்.

தொடா்ந்து அவா் பேசுகையில், மேற்கு மண்டலங்களான கோவையில் 363 மி.மீ., ஈரோடு – 370, திருப்பூா் – 281, நீலகிரி – 462 மி.மீ. மழை பெய்யக் கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதே போன்று சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சராசரியாக 788 மி.மீ. மழைப் பொழிவு இருக்கும் நிலையில் இந்த ஆண்டு 767 மி.மீ. மழையும், கடலூா் பகுதிகளில் 668 மி.மீ., நாகப்பட்டினம் பகுதியில் 924 மி.மீ. மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி