ஆப்நகரம்

விருத்தாசலம் அருகே ஆளில்லா லெவல் கிராஸிங்கில் கார் மீது ரயில் மோதி விபத்து; இருவர் பலி!

ஆளில்லா லெவல் கிராஸிங்கில் ரயில் மீது கார் மோதிய விபத்தில் இருவர் பலியாகினர்.

Samayam Tamil 3 Aug 2018, 10:20 pm
சென்னை: ஆளில்லா லெவல் கிராஸிங்கில் ரயில் மீது கார் மோதிய விபத்தில் இருவர் பலியாகினர்.
Samayam Tamil Train Accident


சேலத்தில் இருந்து விருத்தாசலம் நோக்கி பாசஞ்சர் ரயில் சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் புக்கிரவாரி மற்றும் முகாசாபரூர் நிலையங்களுக்கு இடையே ரயில் சென்றது. அப்போது ஆளில்லா லெவல் கிராஸிங் ஒன்று வந்தது.

அந்த வழியாக கார் ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது. ரயில் வருவதற்குள் முந்திச் சென்று விடலாம் என்று சென்றது. ஆனால் ரயில் பாதையில் சிக்கிக் கொண்டது.

வேகமாக வந்த ரயில் மோதியதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. இதில் காரில் பயணித்த ஒருவர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த இருவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விருத்தாசலத்தில் இருந்து சுமார் 40 கி.மீ தொலைவில் இந்த விபத்து நடந்துள்ளது. இந்நிலையில் ஆளில்லா லெவல் கிராஸிங்குகளை மூட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tamil Nadu Two killed as train hits car at unmanned level crossing.

அடுத்த செய்தி