ஆப்நகரம்

புதிய காற்றழுத்த தாழ்வு நிலை நாளை புயலாக மாறும்: கனமழைக்கு வாய்ப்பு

வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை புயல் சின்னமாக மாறும் என்பதால் வடதமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Samayam Tamil 13 Dec 2018, 1:47 pm
வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை புயல் சின்னமாக மாறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தொிவித்துள்ளது.
Samayam Tamil Rain


சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் பாலச்சந்திரன் இன்று செய்தியாளா்களை சந்தித்தாா். அப்போது அவா் கூறுகையில், தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த வலுவான காற்றழுத்தத் தாழ்வு பகுதி இன்று காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது சென்னைக்கு 1150 கி.மீ. தொலையில் நிலை கொண்டுள்ளது.

இன்று இரவுக்குள் இது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். நாளை இது புயலாக வலுப்பெற வாய்ப்பு உள்ளது. தன் காரணமாக 15, 16ம் தேதிகளில் வடதமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் பலத்த காற்று வீசக்கூடும். காற்றின் வேகம் 45 முதல் 55 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். வடதமிழகக் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக் கூடும்.

புயல் காரணமாக 15, 16ம் தேதிகளில் தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய வங்கக் கடல் பகுதிகளில் மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும், ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருப்பவா்கள் கரைக்கு திரும்புமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தொிவித்துள்ளாா்.

அடுத்த செய்தி