ஆப்நகரம்

தமிழ் முதன்மையாக இருக்க வேண்டும்..! வணிக நிறுவனங்களுக்கு எல்டி உத்தரவு...

தமிழத்தில் உள்ள கடைகள் வணிக நிறுவனங்களில் தமிழ் எழுத்துகளின் பெயர் முதன்மையாக இருக்க வேண்டும் என தொழிலாளர் நலத்துறை உத்தரவு.

Samayam Tamil 11 Mar 2020, 6:56 pm
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்களுக்கும் இத்தகைய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிக்கையை தமிழ்நாட்டு தொழிலாளர் நலத்துறை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது, ''தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் உணவு நிறுவனங்களில் பெயர் பலகை தமிழில் இருக்க வேண்டும் என அரசு ஆணைகள் எண் 3312 நாள் 29.12.1983 மற்றும் 499 நாள் 29.12.1984 முறையே 1948ம் ஆண்டு தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் விதிகளிலும், 1959ம் ஆண்டு தமிழ்நாடு உணவு நிறுவனங்கள் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
Samayam Tamil வணிக நிறுவனங்களில் தமிழ் எழுத்துகளின் பெயர் முதன்மையாக இருக்க வேண்டும் என தொழிலாளர் நலத்துறை உத்தரவு


மேற்படி அரசாணைகளின்படி கடைகள், நிறுவனங்களின் பெயர் பலகையில் தமிழ் எழுத்துக்கள் முதன்மையாக இருக்க வேண்டும். மற்ற மொழிகள் பெயர் பலகையில் உபயோகிக்கப்பட்டால், ஆங்கிலம் இரண்டாவது இடத்திலும் மற்ற மொழிகள் மூன்றாவது இடத்திலும் இருக்க வேண்டும்.

கடைகள், நிறுவனங்களில் பெயர் பலகை வைத்தல் குறித்த சட்ட விதிகளை பின்பற்றப்படவில்லை எனில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தொழிலாளர் ஆணையர் முனைவர் இரா. நந்தகோபால் இ.ஆ.ப. தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் இந்தி திணிப்பு குறித்த சலசலப்புகள் அவ்வப்போது வந்து செல்கிறது. இந்தியை தேசிய அளவில் அடையாளப்படுத்த வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் சில மாதங்களுக்கு முன்னதாக ட்வீட் செய்திருந்தார். அதற்கு தமிழகத்தில் உள்ள கட்சி தலைவர்கள், தமிழ் ஆர்வலர்கள், இளைஞர்கள், மாணவர்கள் என பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

தமிழக பாஜக தலைவராக எல்.முருகன் நியமனம்

மொழி ரீதியாக கிளம்பும் சர்ச்சைகளுக்கிடையில் சமூக ஊடக தளங்களில் வீடியோக்களும் வருகின்றன. மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் இடங்களில் வட மாநிலத்தவர்கள் கடைகளை அமைத்துள்ளனர்.

அதில் சில கடைகளின் பெயர் பலகைகளில் இந்தி மொழியை முதன்மையாகவும், தமிழை இரண்டாவதாகவும் எழுதப்பட்டுள்ளதாக குற்றசாட்டுகள் எழுந்தன. இதனால் பொதுமக்கள் தரப்பிலுருந்தே வாக்குவாதங்கள், சச்சரவுகள் கிளம்பிவந்த நிலையில் தொழிலாளர் நலத்துறை பிறப்பித்திருக்கும் உத்தரவை தமிழ் மக்கள் வரவேற்றுள்ளனர்.

அடுத்த செய்தி