ஆப்நகரம்

துபாயில் கொத்தடிமையாக உள்ள தமிழர்களை மீட்க வேண்டும் : சீறும் சீமான்

துபாயில் ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு சென்ற 15 தமிழர்கள் கொத்தடிமைப் போல் நடத்தப்படுவதாகவும் அவர்களை மீட்க தமிழக அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டு என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

Samayam Tamil 27 Jul 2016, 3:22 pm
சென்னை : துபாயில் ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு சென்ற 15 தமிழர்கள் கொத்தடிமைப் போல் நடத்தப்படுவதாகவும் அவர்களை மீட்க தமிழக அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டு என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
Samayam Tamil tamil workers like slave in dubai seemaan
துபாயில் கொத்தடிமையாக உள்ள தமிழர்களை மீட்க வேண்டும் : சீறும் சீமான்


இதுகுறித்து அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “பல்வேறு கனவுகளுடன், குடும்ப பாரத்தையும், வறுமையையும் தீர்க்கும் பொருட்டு, அந்நிய தேசங்களுக்கு வேலைக்காக சென்ற தமிழக இளைஞர்கள் பலர் அங்கு கொத்தடிமைப்போல் நடத்தப்படுகின்றனர் என்ற செய்தி வெளிநாடுகளில் இருக்கும் தமிழர்கள் குறித்து மிகுந்த அச்சத்தை ஏற்படுத்துகிறது.

துபாய் அபுதாபியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்த முறையில் அங்கு வேலைக்கு சென்ற தமிழர்கள் 15 இளைஞர்கள் அங்கு கொத்தடிமைப் போல் நடத்தப்படுவதாக, அவர்களுக்கான உரிய ஊதியம் வழங்காமல் இழுத்தடிப்பதாகவும் செய்தி வெளிவந்துள்ளது. உரிய ஊதியம் வழங்கும்படி பலமுறை கோரிக்கை வைத்தும் இதுவரை எந்த பதிலும் அந்த நிறுவனம் கூறாமல் உள்ளது.

மேலும், அவர்களின் விசா தேதி கடந்த ஜனவரி 15ம் தேதியோடு முடிந்துவிட்டது. இருப்பினும் அவர்களை தமிழகத்திற்கு திருப்பி அனுப்பாமல் உள்ளது. இதுகுறித்து, அங்குள்ளவர்கள், தங்களை மீட்டுக் கொள்ள அந்நாட்டு நீதிமன்றத்தில் பலமுறை முயற்சித்தும் எந்த பலனும் இல்லை. அதனால், தமிழக அரசு இந்த விஷயத்தில், மத்திய அரசி உதவியுடன் அந்நாட்டு வெளியுறவுத்துறை மூலம் மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், அதோடு வெளிநாடுகளில் வேலைக்கு செல்வோர்களுக்கான தனி அமைச்சகம் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என சீமான் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி