ஆப்நகரம்

எழுத்தாளர் நஞ்சுண்டன் மறைவு!

தமிழ் எழுத்தாளரும், மொழிபெயர்ப்பாளருமான நஞ்சுண்டன் இயற்கை எய்தினார்.

Samayam Tamil 21 Dec 2019, 6:05 pm
கன்னட இலக்கியத்தை தமிழுக்கு கொண்டுவந்தவர்களில் முக்கியமானவர் நஞ்சுண்டன். அவரது அவஸ்தை , பிறப்பு, அக்கா போன்ற மொழிபெயர்ப்புகள் நல்ல கவனம் பெற்றன. குறிப்பாக கன்னட தலித் இலக்கியங்களை தமிழுக்கு மொழிபெயர்த்துள்ளார்.
Samayam Tamil எழுத்தாளர் நஞ்சுண்டன் மறைவு


மொழி பெயர்ப்பு என்பதற்கான சாயல் இல்லாமல் மூலமொழியில் படிப்பது போன்ற வாசிப்பனுவத்தை மொழிபெயர்ப்பு மூலமாக தருவதில் நஞ்சுண்டன் சிறப்பு மிக்கவர் என சக எழுத்தாளர்களே குறிப்பிடுகின்றனர்.

குடியுரிமைத் திருத்தச் சட்டம்: போராட்டம் நடத்திய பாஜகவினர் 299 பேர் கைது...

கன்னடத்தைத் தாய்மொழியாகக் கொண்டிருந்தாலும் தமிழைக் கசடறக் கற்றவர். தனக்குத் தெரிந்தவற்றைப் பிறருக்குச் சொல்லித்தருவதிலும் தெரியாதவற்றைக் கற்றுக்கொள்வதிலும் தீராத நாட்டம் கொண்ட நஞ்சுண்டன் தமிழ் மொழியைப் பிழையின்றி எழுதுவதற்கான பயிற்சியைப் பலருக்கும் தந்தவர்.

திமுக பேரணியில் மக்கள் நீதி மய்யம் கலந்து கொள்ளாது?

எந்த பிரதிபலனும் எதிர்பாராமல் எழுத்தாளர்கள் பலரின் நூல்களை செம்மைப்படுத்தித் தந்தவர். அதை தன் கடமையாகவே நினைத்து செய்து வந்துள்ளார்.

பெங்களூரிலுள்ள பல்கலைக்கழகத்தில் புள்ளியியல் துறை பேராசிரியராகப் பணியாற்றினார்.

அடுத்து ஒரு கனமழை: என்னைக்கு தெரியுமா?

அண்மை காலமாக பெங்களூரில் தனிமையில் வசித்துவந்த அவர் சில தினங்களாக நண்பர்கள் யாரையும் தொடர்பு கொள்ளவில்லை. அவரையும் தொடர்பு கொள்ள முடியாத நிலையில் சந்தேகமடைந்து வீட்டை உடைத்து திறந்து பார்த்த நிலையில் இறந்து மூன்று நாள்களாகிய நிலையில் அவரது உடலை மட்டுமே பார்த்துள்ளனர்.

நஞ்சுண்டனின் அகால மரணம் தமிழ் இலக்கிய உலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி