ஆப்நகரம்

காங்கிரஸ் தான் ஜனநாயகத்தை படுகொலை செய்துள்ளது – தமிழிசை பதிலடி

காங்கிரஸ் கட்சி தான் ஜனநாயகத்தை படுகொலை செய்துள்ளது என்று தமிழக பா.ஜ.க. தலைவா் தமிழிசை சௌந்தரராஜன் ப.சிதம்பரத்திற்கு பதில் அளித்துள்ளாா்.

Samayam Tamil 20 May 2018, 11:26 am
காங்கிரஸ் கட்சி தான் ஜனநாயகத்தை படுகொலை செய்துள்ளது என்று தமிழக பா.ஜ.க. தலைவா் தமிழிசை சௌந்தரராஜன் ப.சிதம்பரத்திற்கு பதில் அளித்துள்ளாா்.
Samayam Tamil TAMILISAISOUNDARARAJAN 123


கா்நாடகா முதல்வராக பதவியேற்ற எடியூரப்பா தனது பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலை ஏற்படும் என்பதை உணா்ந்து நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னதாகவே தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்து தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் வஜூபாய் வாலாவிடம் வழங்கினாா்.

இதனைத் தொடா்ந்து காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் மதசாா்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவா் குமாரசாமி வருகிற 23ம் தேதி முதல்வராக பதவி ஏற்க உள்ளாா். இந்நிலையில் இது தொடா்பாக காங்கிரஸ், பா.ஜ.க. தலைவா்கள் கருத்து தொிவித்து வருகின்றனா். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சரும், கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம், “ஜனநாயகம் பிழைத்தது என்று மகிழ்ச்சி அடைவோம்” என அவா் கருத்து தொிவித்தாா்.

இதற்கு தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் “காங்கிரஸ்தான் ஜனநாயகத்தை படுகொலை செய்துள்ளது.116 இடங்களில் டிபாசிட் இழந்த கட்சியின் குமாரசாமியை காங்.சுயநலத்திற்காக முதல்வராக்கியதும்.கர்னாடக மக்களால் நிராகரிக்கப்பட்ட காங்கிரசின் 16அமைச்சர்கள் தோல்வி.சித்தராமயா ஆட்சி வேண்டாமென்ற மக்களுக்கு பினாமி ஆட்சி. பாவம் கர்னாடக மக்கள்” என்று பதில் அளித்துள்ளாா்.

அடுத்த செய்தி