ஆப்நகரம்

கூட்டத்தை மட்டுமா கூட்டினார்? தெருவையும் கூட்டினார்: ஆளுஞருக்கு தமிழிசை பாராட்டு

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கூட்டத்தைக் கூட்டியது மட்டுமல்ல தெருவையும் கூட்டி முன்னுதாரணமாக திகழ்ந்திருக்கிறார் என்று பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.

TNN 16 Nov 2017, 12:43 am
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கூட்டத்தைக் கூட்டியது மட்டுமல்ல தெருவையும் கூட்டி முன்னுதாரணமாக திகழ்ந்திருக்கிறார் என்று பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil tamilisai lauds tn governor banwarilal purohits actions
கூட்டத்தை மட்டுமா கூட்டினார்? தெருவையும் கூட்டினார்: ஆளுஞருக்கு தமிழிசை பாராட்டு


தமிழக ஆளுநர் பன்வாரிலால் கடந்த இரண்டு நாட்களாக ஆய்வு பேற்கோண்டு வருகிறார். செவ்வாய்க்கிழமை அவர் திடீரென கோவை மாவட்ட ஆட்சியர், கமிஷனர் ஆகியோருடன் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார். புதன்கிழமை கோவை பேருந்துநிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள பயோ டாய்லெட்டை ஆய்வு செய்தார். பின், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சாலையைச் சுத்தம் செய்யும் பணியில் இறங்கினார். தொடர்ந்து கோவை காந்திபுரத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மேம்பாலத்தையும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பார்வையிட்டார்.

ஆளுநரின் அதிரடி நடவடிக்கைகளுக்கு தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட பல அரசியல் தலைவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மாநில அரசின் அதிகாரத்தைக் கைப்பற்றும் முயற்சி என்றும் புதுச்சேரியைப் போல தமிழகத்திலும் ஆளுநர் ஆதிக்கத்தை ஏற்படுத்த பாஜக அரசு முயல்வதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இந்நிலையில், ஆளுநரின் களப்பணி குறித்து தனது ட்விட்டரில் கருத்து வெளியிட்டுள்ள பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன், பன்வாரிலால் புரோகித் கூட்டத்தைக் கூட்டியது மட்டுமல்ல தெருவையும் கூட்டி முன்னுதாரணமாக திகழ்ந்திருக்கிறார் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆளுஞர் கூட்டத்தைக்கூட்டியதுமட்டுமல்ல தெருவையும்கூட்டி முன்னுதாரணமாக திகழ்ந்திருக்கிறார் — Tamilisai Soundrajan (@drtamilisaibjp) November 15, 2017

அடுத்த செய்தி