ஆப்நகரம்

ஹெச்.ராஜாவின் கருத்து பாஜக கருத்தாகாது - தமிழிசை

திரிபுராவை தொடர்ந்து தமிழகத்தில் பெரியாரின் சிலையை அகற்றுவோம் என ஹெச்.ராஜா தெரிவித்த கருத்து அவரின் சொந்த கருத்து என தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 6 Mar 2018, 4:25 pm
சென்னை : திரிபுராவை தொடர்ந்து தமிழகத்தில் பெரியாரின் சிலையை அகற்றுவோம் என ஹெச்.ராஜா தெரிவித்த கருத்து அவரின் சொந்த கருத்து என தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
Samayam Tamil tamilisai soundarajan explain about bjp leader h raja for his periyar statue razing comment
ஹெச்.ராஜாவின் கருத்து பாஜக கருத்தாகாது - தமிழிசை


திரிபுராவில் பாஜக ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில், அங்கு நிறுவப்பட்டிருந்த லெனின் சிலையை பாஜக.,வினர் அகற்றினர். அதோடு கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தை அடித்து உடைத்து தீ வைத்தனர்.

பெரியார் சிலை அகற்றப்படும் :
இது தொடா்பாக பா.ஜ.க. தேசிய செயலாளா் ஹெச்.ராஜா தனது முகநூல் பக்கத்தில், “லெனின் சிலை அகற்றப்பட்டதைப் போன்று நாளை தமிழகத்தில் பொியாா் சிலையும் அகற்றப்படும்” என்று பதிவிட்டிருந்தாா்.


இதையடுத்து அவருக்கு பல்வேறு தமிழ் அமைப்புகளும் பகிரங்க கண்டனங்களை விடுத்து வருகின்றன.

தமிழிசை கருத்து:
இதற்கு பதிலளித்துள்ள தமிழிசை, “ஹெச் ராஜாவின் கருத்து கட்சியின் கருத்து இல்லை. அது அவரின் தனிப்பட்ட கருத்து. அதற்கும் கட்சிக்கும் சம்பந்தமில்லை. கட்சியின் கருத்தாக இருந்தால் விளக்கமளிப்பேன்” என தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி