ஆப்நகரம்

பாஜகவுக்கு எதிராக முழக்கமிட்ட இளம்பெண்ணுடன் தமிழிசை சௌந்தரராஜன் வாக்குவாதம்

சென்னையிலிருந்து தூத்துக்குடி சென்ற விமானத்தில் பாஜகவுக்கு எதிராக முழக்கமிட்ட இளம் பெண் ஒருவருடன் தமிழிசை சௌந்தரராஜன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னார் விமானம் தரையிறங்கியதும் கோஷமிட்ட இளம்பெண்ணுக்கு எதிராக விமான நிலைய அதிகாரிகளிடம் தமிழிசை சவுந்தரராஜன் புகார் அளித்தார்.

Samayam Tamil 3 Sep 2018, 5:18 pm
சென்னையிலிருந்து தூத்துக்குடி சென்ற விமானத்தில் பாஜகவுக்கு எதிராக முழக்கமிட்ட இளம் பெண் ஒருவருடன் தமிழிசை சௌந்தரராஜன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னார் விமானம் தரையிறங்கியதும் கோஷமிட்ட இளம்பெண்ணுக்கு எதிராக விமான நிலைய அதிகாரிகளிடம் தமிழிசை சவுந்தரராஜன் புகார் அளித்தார்.
Samayam Tamil tamilisai-soundarrajan-cover-pic
விமான நிலையத்தில் பெண் பயணியிடம் தமிழிசை சௌந்தரராஜன் வாக்குவாதம்

குற்றாலத்தில், தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தை சேர்ந்த 1000 பேர் பாஜகவில் இணையும் விழாவில் பங்கேற்க, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் சென்னையிலிருந்து இன்று தூத்துக்குடிக்கு விமானம் மூலம் வந்தார்.

அப்போது அதே விமானத்தில் பயணம் செய்ய வந்த இளம் பெண், தமிழிசையைப் பார்த்ததும், “பாஜக ஆட்சி ஒழிக, பாசிச ஆட்சி ஒழிக” என்று கோஷம் எழுப்பியதாக சொல்லப்படுகிறது. இதானால் அதிருப்தி அடைந்த தமிழிசை சௌந்திரராஜன், விமானம் தரையிறங்கிய உடன், இளம் பெண்ணுக்கு எதிராக விமான நிலைய அதிகாரிகளிடம் புகார் அளித்தார்.

விசாரணையில், கோஷமிட்டதாக சொல்லப்படும் அந்த இளம் பெண், தூத்துக்குடியைச் சேர்ந்த மருத்துவரின் மகள் சோபியா (23) என்பதும், தற்போது அவர் கனடாவில் படித்து வருவதும் தெரியவந்தது. சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு அவர் விமானம் ஏறிய போது இந்த சம்பவம் நடந்ததும் தெரியவந்தது.

தூத்துக்குடி விமான நிலையத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் அளித்த புகாரின் அடிப்படையில், இளம் பெண் சோஃபியாவிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அடுத்த செய்தி