ஆப்நகரம்

Tamilisai Soundararajan: தன் வாயாலே பாஜகவிற்கு ஆப்பு வைத்த தமிழிசை: இனி தமிழகத்தில் தாமரை மலராது போலயே !

கர்நாடக தேர்தலுக்காகத்தான் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமால் காலம் தாழ்த்தினோம் என்று பாஜக மாநிலத்தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 11 May 2018, 3:58 pm
கர்நாடக தேர்தலுக்காகத்தான் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமால் காலம் தாழ்த்தினோம் என்று பாஜக மாநிலத்தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil thamizhisai_03029_11304


பிரதமர் நரேந்திர மோடி இதுவரை காவிரி மேலாண்மை விவகாரம் சம்பந்தமாக தமிழக முதல்வரையோ, அனைத்துக்கட்சித் தலைவர்களையோ சந்திக்க மறுத்து வருகிறார். மத்திய அமைச்சர்களும் காவிரி வழக்கில் எதிரான கருத்துக்களை கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த வழக்கு மே 3 ஆம் தேதி மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போதும் உச்சநீதிமன்றம் அறிவித்தப்படி மேலாண்மை திட்டத்தை மத்திய அரசு தாக்கல் செய்யவில்லை.

மேலும் காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வரைவு திட்டம் தயாராகிவிட்டது, ஆனால் கையெழுத்திட வேண்டிய மத்திய அமைச்சர்கள் கர்நாடக தேர்தல் பிரசாரத்தில் இருப்பதால் மத்திய அமைச்சரவைக்கு அனுப்ப முடியவில்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டது. எனவே கூடுதலாக 10 நாட்கள் அவகாசம் வேண்டும் கோரிக்கை வைத்தது..

இந்த நிலையில் பாஜக மாநிலத்தலைவர் தமிழிசை செளந்தரராஜன் செய்தியாளர்களிடம் பேசுகையில் ‘ கர்நாடக தேர்தலுக்காகத்தான் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் இருக்கிறோம். தேர்தல் அரசியலை எல்லா கட்சிகளும் செய்கின்றனர். மற்ற கட்சிகளை போன்று நாங்கள் மறைமுகமாக அரசியல் செய்யவில்லை. எல்லாம் வெளிப்படையாகத்தான் செய்கிறோம் என்று கூறியுள்ளார்.

அடுத்த செய்தி