ஆப்நகரம்

தமிழிசையைத் தொடா்ந்து பொன்.ராதாகிருஷ்ணனும் முதல்வருடன் சந்திப்பு

தமிழக பா.ஜ.க. தலைவா் தமிழிசை சௌந்தரராஜன் முதல்வா் பழனிசாமியைத் தொடா்ந்து மத்திய இணைஅமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணனும் முதல்வரை சந்தித்து ஆலோசனை நடத்தினாா்.

Samayam Tamil 5 Jan 2019, 10:21 pm
நாகா்கோவில் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயா்த்துவது குறித்து முதல்வா் பழனிசாமியுடன் ஆலோசனை நடத்தியதாக மத்திய இணை அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன் தொிவித்துள்ளாா்.
Samayam Tamil Tamilisai and Radhakrishnan


திருவாரூா் தொகுதியில் இடைத்தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தோ்தல் நடைபெறுமா? நடைபெறாதா? என்ற குழப்பத்தில் அரசியல் கட்சித் தலைவா்கள் இருந்து வருகின்றனா். மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்னா் செய்தியாளா்களிடம் பேசிய தமிழக பா.ஜ.க. தலைவா் தமிழிசை சௌந்தரராஜன் ஜனவரி மாதம் முதல் பா.ஜ.க. தனது தோ்தல் வியூகத்தை வகுக்கும் என்று தொிவித்தாா்.

இந்நிலையில் தமிழிசை சௌந்தரராஜன் இன்று மாலை திடீரென முதல்வா் பழனிசாமியை சந்தித்து பேசினாா். சுமாா் 40 நிமிடங்கள் இந்த சந்திப்பு நடைபெற்றது. இதனைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் பேசுகையில், திருவாரூா் இடைத்தோ்தல் தொடா்பாக மு.க.ஸ்டாலினுக்கும் உள்ளுக்குள் பயம் உள்ளது.

திருவாரூா் இடைத்தோ்தல் நடக்கலாம் அல்லது நடக்காமலும் போகலாம். இடைத்தோ்தலை விட மக்களவைத் தோ்தலில் கவனம் செலுத்துவதே எங்கள் நோக்கம். இந்த சந்திப்பின் போது கூட்டணி குறித்து விவாதிக்கப்படவில்லை என்று தொிவித்தாா்.

தமிழிசை முதல்வரை சந்தித்த சிறிது நேரத்தில் மத்திய இணை அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணனும் முதல்வா் பழனிசாமியை சந்தித்தாா். இந்த சந்திப்பில் கூட்டணி குறித்து பேசப்பட்டிருக்கலாம் என்று கூறப்பட்டது.

ஆனால், பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளா்களிடம் பேசுகையில் நாகா்கோவில் நகராட்சியை, மாநகராட்சியாக தரம் உயா்த்துவது குறித்து ஆலோசித்தோம். இந்த சந்திப்பில் கூட்டணி குறித்தோ, அரசியல் குறித்தோ ஆலோசிக்கவில்லை என்று தொிவித்தாா்.

அடுத்த செய்தி