ஆப்நகரம்

திமுகவுக்கு டுவிட்டர் மூலம் தமிழிசை பதிலடி

தமிழக பாஜக தலைவர் தமிழிசை வெளியிட்டுள்ள டுவிட்டில் மதிய உணவுத் திட்டம் காமராஜரால் கொண்டு வரப் பட்டது. எம்ஜிஆர் அதனைத் தொடர்ந்தார். ஆனால் மதிய உணவுத் திட்டம் தங்கள் ஆட்சியில்தான் கொண்டுவரப் பட்டதாக திமுக பொய் சொல்கிறது என தமிழிசை திமுகவின் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

Samayam Tamil 9 Jun 2019, 6:10 pm
தமிழக பாஜக தலைவர் தமிழிசை வெளியிட்டுள்ள டுவிட்டில் மதிய உணவுத் திட்டம் காமராஜரால் கொண்டு வரப் பட்டது. எம்ஜிஆர் அதனைத் தொடர்ந்தார். ஆனால் மதிய உணவுத் திட்டம் தங்கள் ஆட்சியில்தான் கொண்டுவரப் பட்டதாக திமுக பொய் சொல்கிறது என தமிழிசை திமுகவின் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
Samayam Tamil tamilisai-soundararajan_650x400_81462197748

சென்னை அனகாபுத்தூரை சேர்ந்தவர்கள் பன்னீர்செல்வம் - பவானி தம்பதியினர். இவர்களுக்கு 3 மகள்கள். 3 மகள்களும் அனகாபுத்தூர் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் படித்து வந்தனர். இதில் ஜீவிதா நீட் தேர்வில் 605 மதிப்பெண்கள் எடுத்துள்ளார்.

ஜீவிதா பத்திரிகைகளுக்கு பேட்டி அளிக்கையில், எங்கள் அப்பா ஒரு தையல் கடையில் வேலை செய்து வருகிறார். அதில் வரும் வருமானத்தில்தான் எங்களை படிக்க வைத்தார். ஏழ்மை நிலையில் உள்ள எங்கள் குடும்பத்தில் இருந்த என்னை மருத்துவராக படிக்க வைக்க முடியுமா என பல நாட்கள் நினைத்துள்ளேன். இந்த நிலையில் நான் நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ளேன் என்றார்.


இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், நீட் தேர்வில் வெற்றி பெற்ற சென்னை அனகாபுத்தூரை சேர்ந்த ஏழை தையல் தொழிலாளர் மகள் மாணவி ஜீவிதாவின் விடாமுயற்சியை பாராட்டி அவருடைய மருத்துவ கல்லூரி கட்டண செலவை ஏற்றுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

அரசியல் நோக்கத்துக்காக தமிழிசை இதனைச் செய்கிறார் என கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர் திமுகவினர். மேலும் இவ்வாறு செய்வதால் பாஜகவால் தமிழகத்தில் கால் ஊன்ற முடியாது என அவர்கள் கூற தமிழிசை கடுப்பாகினார்.

தற்போது அவர் வெளியிட்டுள்ள டுவிட்டில் மதிய உணவுத் திட்டம் காமராஜரால் கொண்டு வரப் பட்டது. எம்ஜிஆர் அதனைத் தொடர்ந்தார். ஆனால் மதிய உணவுத் திட்டம் தங்கள் ஆட்சியில்தான் கொண்டுவரப் பட்டதாக திமுக பொய் சொல்கிறது என தமிழிசை திமுகவின் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

அடுத்த செய்தி