ஆப்நகரம்

நடராஜருக்கும் எனக்கும் இடையில் நாரதர்கள் தேவையில்லை - தமிழிசை

ஆளுநர்கள் அரசியல் செய்யவில்லை, ஆளுநர்களின் நடவடிக்கைகள் அரசியல் செய்யப்படுகிறது என்று புதுவை துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்

Samayam Tamil 7 Jul 2022, 2:01 pm
இரட்டைமலை சீனிவாசன் பிறந்த நாள் விழாவையொட்டி சென்னை கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் அமைந்துள்ள அவரின் திருவுருவச் சிலை மற்றும் வெளியே வைக்கப்பட்டுள்ள திருஉருவப்படத்திற்கு புதுவை துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் மரியாதை செலுத்தினார்.
Samayam Tamil தமிழிசை சௌந்தரராஜன்
தமிழிசை சௌந்தரராஜன்


அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “இரட்டைமலை சீனிவாசனுக்கு மரியாதை செலுத்துவதில் பெருமைப்படுகிறேன். அம்பேத்கரோடு இணைந்து ஒடுக்கப்பட்ட மக்களுக்காக மிகப்பெரிய புரட்சியை செய்தவர். மகாத்மா காந்திக்கு தமிழில் கையெழுத்து இட கற்று கொடுத்தவர் இரட்டைமலை சீனிவாசன்.” என்று புகழாரம் சூட்டினார்.

முடிந்தவரை தமிழில் கையெழுத்து போட நாம் அனைவரும் பழகிக் கொள்ள வேண்டும் எனவும், அதனை பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும் எனவும் தமிழிசை சௌந்தரராஜன் அறிவுறுத்தினார்.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் அவமதிக்கப்பட்டது தொடர்பான செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த தமிழிசை சௌந்தரராஜன், “எனக்கும் நடராஜருக்கும் இடையில் நாரதர் தேவையில்லை, அபிஷேகம் செய்வது தெரிய வேண்டும் என்று அங்கே உட்கார வைத்தார்கள். ஒருவர் அங்கே இருந்து எழுந்து செல்ல வேண்டும் என கூறினார். நான் உரிமையோடு இங்கேயே அமருவேன் என கூறினேன். நான் அவருக்கு அடிபணிய மறுத்தேன் என்பது உண்மை. சிதம்பரம் நடராஜர் கோயிலில் எனக்கு எந்த ஒரு மன வருத்தமும் ஏற்படவில்லை. எனக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை அவர்கள் கொடுத்தார்கள் நானும் கொடுத்தேன். யாரையும் அவமானப்படுத்துவது சரியான முறையல்ல. ஆனால் அவர்கள் எந்த நோக்கத்திற்காக அப்படி செய்தார்கள் என்று தெரியவில்லை.” என்றார்.
அதிமுக சின்னத்தை முடக்கும் வழக்கு: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
தொடர்ந்து பேசிய அவர், “ஆளுநர்கள் அரசியல் செய்யவில்லை, ஆளுநர்களின் நடவடிக்கைகள் அரசியல் செய்யப்படுகிறது. காரைக்காலில் பல்வேறு நல்ல திட்டங்கள் கொண்டுவரப்படுகிறது அங்கு மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.” என அறிவுறுத்தினார்.

அடுத்த செய்தி