ஆப்நகரம்

பாஜக தமிழக தலைவர் தமிழிசையை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்!!

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன், தமிழ்நாட்டில் பாஜகவை அரங்கேற்றாமல் உயிர்போகாது என தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 23 Sep 2018, 5:09 am
தமிழ்நாட்டில் பாஜகவை அரங்கேற்றாமல் உயிர்போகாது என தெரிவித்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜனை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
Samayam Tamil பாஜக தமிழக தலைவர் தமிழிசையை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்!!
பாஜக தமிழக தலைவர் தமிழிசையை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்!!


ராஜபாளையத்தில் நடைபெற்ற பாஜக கட்சியின் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய அக்கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன், “22 மாநிலங்களில் ஆட்சி செய்து வரும் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியை அகற்ற முடியாது. திமுக கட்சிக்கு தமிழகத்தைத் தாண்டினால் முகவரி கிடையாது. ஸ்டாலினால் அதிமுக ஆட்சியையே கலைக்க முடியவில்லை. கச்சத்தீவை தாரை வார்த்துக் கொடுத்த திமுகவுக்கு ஊழலைப் பற்றி பேச தகுதியில்லை” எனத் தெரிவித்தார்.

அப்போது அவர், தமிழகத்தில் பாஜகவை அரங்கேற்றாமல் என் உயிர் போகாது என தெரிவித்தார். அவரின் இந்தக் கருத்தை நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் கலாய்த்து வருகின்றனர்.


அடுத்த செய்தி