ஆப்நகரம்

தலைசுற்றும் அளவிற்கு பிரச்னைகள்; சமாளிக்க ஒன்று கூடுகிறது தமிழக அமைச்சரவை...!

தமிழக அமைச்சரவை இன்று மாலை கூடுகிறது.

TNN 13 Jun 2017, 1:48 am
சென்னை: தமிழக அமைச்சரவை இன்று மாலை கூடுகிறது.
Samayam Tamil tamilnadu cabinet meet starts today
தலைசுற்றும் அளவிற்கு பிரச்னைகள்; சமாளிக்க ஒன்று கூடுகிறது தமிழக அமைச்சரவை...!


தமிழக சட்டமன்றம் வரும் 14ஆம் தேதி கூடுகிறது. தற்போதைய தமிழக அரசியல் சூழல் ஏராளமான குழப்பங்கள் நிறைந்து காணப்படுகிறது. நிமிடத்திற்கு நிமிடம் புதிய மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. இந்நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று 6வது அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. மாலை 4.30 மணிக்கு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் கட்சியின் செயல்பாடுகள் குறித்தும், எதிர்க்கட்சிகளை சமாளிப்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல் அதிமுக அணிகளுக்கு இடையிலான பிரச்னை, தினகரன் பிரச்னை குறித்து ஆலோசனை நடத்தப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் தேர்தல் அறிக்கை குறித்த அறிவிப்புகள், எம்.எல்.ஏக்களின் கோரிக்கைகள், பொதுத் திட்டங்கள் உள்ளிட்டவை குறித்தும் விவாதிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tamilnadu Cabinet meet starts today.

அடுத்த செய்தி