ஆப்நகரம்

டிடிவி தினகரனை ஊடகங்கள் மிகைப்படுத்தி காட்டுகின்றன; முதல்வர் குற்றச்சாட்டு!

டிடிவி தினகரனை பத்திரிக்கை ஊடகங்கள் மிகைப்படுத்தி காட்டுவதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார்.

Samayam Tamil 14 Jan 2018, 2:08 pm
டிடிவி தினகரனை பத்திரிக்கை ஊடகங்கள் மிகைப்படுத்தி காட்டுவதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார்.
Samayam Tamil tamilnadu cm edappadi palanisamy press meet
டிடிவி தினகரனை ஊடகங்கள் மிகைப்படுத்தி காட்டுகின்றன; முதல்வர் குற்றச்சாட்டு!


தமிழர் திருநாளான இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியன பின்வருமாறு;
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான வழக்கில் இன்னும் நான்கு வாரங்களில் நல்ல தீர்ப்பு வரும் என நம்புகிறோம். கர்நாடக அரசு, 80 டி.எம்.சி. தண்ணீரை தமிழகத்துக்கு திறக்க வேண்டும் என்று கோரியுள்ளோம். அதிலிருந்து 15 டி.எம்.சி தண்ணீரை உடனடியாக திறக்க கர்நாடக முதல்வரை வலியுறுத்தியுள்ளோம். டெல்டா பாசனத்திற்கு தற்போது முறைப்படி தண்ணீர் வழங்கப்பட்டு வருகின்றது.

டிடிவி தினகரனை ஊடகங்கள் தான் பெரிதுபடுத்தி காட்டுகின்றன. ஜெயலலிதா இருந்தபோது அவர் 10 ஆண்டுகளாக கட்சியில் தலைகாட்டவில்லை. மேலும் ஊராட்சி கழக செயலர்கள் அனைவரும் எங்களுக்கு ஆதரவாக உள்ளனர்.

அலங்காநல்லூரில் நடைபெற இருக்கும் ஜல்லிக்கட்டில் நானும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் கலந்து கொள்ள உள்ளோம். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி