ஆப்நகரம்

அதிமுக யாருக்கும் அடிமை இல்லை : முதல்வர் 'பஞ்ச் டயலாக்'

சென்னையில் இன்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் (அமமுக) துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்டோரை சரமாரியாக சாடினார்.

Samayam Tamil 24 Nov 2019, 4:12 pm
அதிமுக யாருக்கும் அடிமை இல்லை என முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவவர் மு.க.ஸ்டாலினுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார்.
Samayam Tamil WhatsApp Image 2019-11-24 at 14.06.33.


அதிமுகவின் பொதுக்குழு, செயற்குழு கூட்டம், சென்னை வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சி, அதிகாரத்துக்கு வந்தது குறித்து, நடிகர் ரஜினிகாந்த் விமர்சித்திருந்த நிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியது:

தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு, நல்ல பல திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. இதனை பொறுத்து கொள்ள முடியாமல், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், இந்த அரசின் மீது ஏதாவது குற்றச்சாட்டுகளை சுமத்தி கொண்டே இருக்கிறார்.

இன்று கூடுகிறது அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம்!

அதேசமயம், அதிமுக அரசை நேரடியாக எதிர்க்கும் வலிமையும் அவருக்கு இல்லை. இதனால்தான் அவர், அதிமுக அரசு மத்திய அரசுக்கு அடிமையாக உள்ளது என தொடர்ந்து கூறி வருகிறார். ஆனால், எனது தலைமையிலான தமிழக அரசு, மத்திய அரசுக்கு மட்டுமல்ல; யாருக்கும் அடிமை இல்லை.

டிடிவி தினகரனை நம்பி சென்ற எம்எல்ஏக்கள் எல்லாம் தற்போது வீதியில் நிற்கின்றனர். தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் உறுதியாக நடைபெறும்.

கட்சியும், ஆட்சியும் கண்ணாடியை போன்றது. அதனை உடையாமல் பாதுகாப்பது இங்குள்ள அனைவரின் பொறுப்பு என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

அடுத்த செய்தி