ஆப்நகரம்

அரசு வேலைவாய்ப்பில் விளையாட்டு வீரர்களுக்கு 3%ஆக இடஒதுக்கீடு அதிகரிப்பு; முதல்வர் பழனிசாமி!

சென்னை: விளையாட்டு வீரர்களுக்கான இடஒதுக்கீட்டு சதவிகிதத்தை அதிகரித்து முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

Samayam Tamil 16 Oct 2018, 9:47 pm
தேசிய, சர்வதேச போட்டிகளில் சாதிக்கும் வீரர்களுக்கு தமிழக அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் வேலைவாய்ப்பில் முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று சுதந்திர தின விழா உரையில் முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.
Samayam Tamil Palaniswami


அதன்படி அந்த விளையாட்டு வீரர்களுக்கு 2% இடஒதுக்கீடு அளிக்கப்படும். இதற்கான பாராட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வர் பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய முதல்வர் பழனிசாமி, அரசு வேலைவாய்ப்புகளில் விளையாட்டு வீரர்களுக்கான இடஒதுக்கீடு 2%ல் இருந்து 3%ஆக உயர்த்தப்படுவதாக அறிவித்தார். தமிழக விளையாட்டு வீரர்கள் முதலிடம் பெற அரசு அனைத்து உதவிகளையும் செய்யும்.

எனவே வீரர்கள் தங்கள் முழு பலத்தை வெளிப்படுத்த திட்டமிட்டு செயல்பட வேண்டும். கல்வியைப் போல் விளையாட்டிற்கும் தமிழக அரசு முக்கியத்துவம் அளிக்கும். கிராமப்புறங்களில் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்க அரசு நிதி உதவி வழங்கி வருகிறது.

சென்னையைத் தவிர்த்து மற்ற 31 மாவட்டங்களில் தலா ஒரு கிராமத்திற்கு விளையாட்டு மைதானம், உபகரணங்கள், பயிற்சி அளிக்கப்படுவதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

Tamilnadu CM Palaniswami announces sports quota reservation upto 3 percent.

அடுத்த செய்தி