ஆப்நகரம்

தமிழ்நாடு கொரோனா நிதிக்கு நிதியளித்தால் வரிவிலக்கு : முதல்வர்

தமிழ்நாடு முதல்வரின் வேண்டுகோளின்படி, கொரோனா நிதிக்கு நிதியுதவி அளித்தால் 100% வரிவிலக்கு

Samayam Tamil 27 Mar 2020, 7:25 pm
நாடு முழுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், கொரோனா தடுப்புப் பணிக்காக முதல்வர் பொதுநிவாரண நிதிக்கு பொதுமக்கள் மனமுவந்து நிதியுதவி அளிக்க தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
Samayam Tamil edappadi


அதில், கொரோனா தடுப்புப் பணிகளுக்காக முதல்வர் பொதுநிவாரண நிதிக்கு நிதி அளிக்க விரும்புவோர் இந்தியன் ஓவர் சீஸ் வங்கியின் 117201000000070 IFSC : IOBA0001172 இல் நிதியுதவி அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வெளிநாடு வாழ் மக்கள் IOBAINBB001 Indian Overseas Bank இல் நிதியுதவி அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட்ட கொரோனா!

நன்கொடை வருமான வரிச் சட்டம் 2010 பிரிவு 80 (G) இன் கீழ் 100% வரிவிலக்கு உண்டு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 10 லட்சத்திற்கு மேல் நிதியளிப்பவரது பெயர்கள் பத்திரிகைகளில் வெளிவரும் என்றும் தமிழக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி