ஆப்நகரம்

தொடர் மழையால் வேகமாக நிரம்பும் தமிழக அணைகள்.!

தொடர் மழை காரணமாக, தேனி மாவட்டம் மஞ்சாளாறு அணை தனது முழு கொள்ளலவான 57 அடியில் 55 அடியை எட்டியுள்ளது.

TNN 17 Sep 2017, 1:48 pm
தொடர் மழை காரணமாக, தேனி மாவட்டம் மஞ்சாளாறு அணை தனது முழு கொள்ளலவான 57 அடியில் 55 அடியை எட்டியுள்ளது.
Samayam Tamil tamilnadu dams water level continuously increases because of heavy rain
தொடர் மழையால் வேகமாக நிரம்பும் தமிழக அணைகள்.!


மேற்கு தொடர்ச்சி மலையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால், தேனி மாவட்டத்திலுள்ள அணைகள் அனைத்தும் வேகமாக நிரம்பி வருகின்றன. தேனி மாவட்டம் பெரிய குளத்திலுள்ள மஞ்சளாறு அணை தனது முழு கொள்ளலவையும் எட்டும் நிலையில் உள்ளதால், கரையோரத்தில் வசிக்கும் கிராமப்புற மக்களுக்கு 3 ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தற்போது அணைக்கு விநாடிக்கு 82 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

இதே போல், முல்லை பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. தற்போது அணையின் நீர்மட்டம் 124.70 அடியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tamilnadu dams water level continuously increases because of heavy rain.

அடுத்த செய்தி